அரசு அளித்த வாக்குறுதி மற்றும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக வருவாய் அலுவலர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

0
24

அரசின் வாக்குறுதி மற்றும் மழை வெள்ள பாதிப்பு ஆகியவற்றால் வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எம்.பி.முருகையன், பொதுச்செயலாளர் சு.சங்கரலிங்கம் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கடலோர மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 10 மாவட்டங்களுக்கு இ்ப்போராட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களி்ல் போராட்டம் நடபெற்றது. தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சங்க நிர்வாகிகளை அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர் வருவாய்த்துறை அலுவலர்களின் நிலுவை கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இவற்றில் சில ஒரு மாத அவகாசத்தில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர். பல மாவட்டங்களில் அதிக மழை உள்ளதால் பணிகளுக்கு திரும்ப கேட்டுக் கெண்டனர்.

அரசுடனான பேச்சுவார்த்தையில் 38 மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் நிலையில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒரு மாதத்துக்குள் அறிவிக்கை வெளியிடப்படும். பேரிடர் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் மீண்டும் ஏற்படுத்தப்படும் என்றும் ரெிவித்தள்ளனர். கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்பது இதில் முக்கிய அம்சமாகும்.

மேலும், நகர்ப்புற நிலவரி வசூல் பணிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்படுவதை ரத்து செய்ய வேண்டும், வருவாய்த்துறை பணியிடங்களை கலைக்கும், கறைக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக தெரிவிக்கபபட்டுள்ளது. அரசின் உறுதியை தொடர்ந்து, நவ.28ம் தேதி இரவு நடைபெற்ற மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனைக்கூட்டத்தில், வருவாய்த்துறை கோரிக்கைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருவதாலும், போராட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள ஒரு மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here