Google search engine
2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது. இதற்கான வேலைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சர்ச்சையாகி இருக்கிறது. கோவை ஒண்டிப்பு​தூரில் திறந்​தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் சுமார் 20.72 ஏக்கரை ஒதுக்​கித்தான் கிரிக்கெட் மைதானம் அமைக்​கப்​படு​கிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் என்ற பெயரில், கோவையில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டி...
பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மாநில உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு எடுத்து வரும் முயற்சிகளை நிதிநிலை அறிக்கை முற்றாக நிராகரித்து, புறக்கணித்துள்ளது. அரசியல் காரணங்களை...
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், இதை தடுக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளன. கோயிலுக்கு இந்து பக்தர்களும், தர்காவுக்கு இஸ்லாமியர்களும் சென்று வழிபட்டு வந்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள்...
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக வனத் துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக...
புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலக அளவில் மிக ஆபத்தான உடல்நல பிரச்சினைகளில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. தற்போது புற்றுநோய் பாதிப்புடன்...
தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார். அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2,...
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டுக்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. தொடக்​கத்​தில் தேசிய கீதம் பாடப்​படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்​காமல் ஆளுநர் ஆர்.என்​.ரவி வெளி​யேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேரவை...
தடை செய்​யப்​பட்ட பயங்​கரவாத அமைப்​புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்​குடி உட்பட தமிழகத்​தில் 6 இடங்​களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்​தினர். இதில் 2 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன. இந்தியா​வில் ஹிஸ்ப்​-உத்​-தஹ்ரிர் என்ற பயங்​கரவாத அமைப்​புக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்​புக்கு ஆதரவாக சிலர் செயல்​பட்டு வருவ​தாக​வும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்​கத்​தில் சேர்க்க முயற்சி...
தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருபவர் கல்பனா நாயக். இவர், கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐஜியாக...
தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ மற்றும் வருமான வரித்துறை ஊழியர்கள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழி்ப்பறி செய்ததாக திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ ராஜாசிங், வருமான வரித்துறை ஊழியர்கள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீஸார் கைது...