Google search engine
சென்னையில் "கிரெடய்" சார்பில் 3 நாட்கள் நடைபெறும் 'பேர்புரோ 2025' வீட்டு வசதிக் கண்காட்சியை வரும் 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய புதிய கட்டிடத்தில் 'பேர்புரோ 2025' எனும் வீட்டு வசதிக் கண்காட்சி வரும் 14-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின்...
மாநகராட்சி வசூலிக்கும் வணிக உரிம கட்டணத்தை ரூ.1000 ஆக குறைக்க வேண்டும் என்று ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு அளித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் தலைமையில் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனை நேற்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் வணிக உரிம கட்டணம் ரூ.650-லிருந்து ரூ.3,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மேலும், 3 ஆண்டுக்கான...
தமிழக கடலோர பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில், வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பிரேத பரிசோதனை செய்ய நேற்று முன்தினம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கடல் வள பாதுகாப்பு மற்றும் மீன் வளத்தை பெருக்குவதில் கடல் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆழ்கடலுக்கு செல்லும் இவை, இனப்பெருக்கம் செய்வதற்காக டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை தமிழகம் முதல் ஒடிஷா கடலோர பகுதிகளில்...
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததாக நடிகை கவுதமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி திரைப்பட தயாரிப்பாளர் மனைவியான நாச்சாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதிலளிக்க கவுதமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட நடிகையும், அதிமுக பிரமுகருமான கவுதமியின் சொத்துகளை விற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சி.அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன், மருமகள், சகோதரர் உள்ளிட்ட...
காவலரை கொடூரமாகத் தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காவலர் ரங்கநாதன் (39). திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநராக உள்ளார். இவர் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றியபோது காவலர்கள் மதுரை ஆனந்த் (33), சென்னை புதுப்பேட்டை சுந்தரராஜன் (38), திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சேர்ந்த மணிபாபு (30)...
அமைச்​சர்களை விட பல நேரங்​களில் அவர்களது உதவியாளர்கள் தான் ஏடாகூடமாக எதையாவது செய்து கெட்ட பெயரைச் சம்பா​திப்​பார்கள். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.​சாமி​நாதனின் உதவியாளர் வினோத்​கு​மாரும் அப்படித்தான் ஒரு சிக்கலில் மாட்டி இருக்​கிறார்! கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே​யுள்ள இடையன் ​கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாத லாரியில் ஒரு கும்பல் கிராவல் மண் கடத்தியது. விஷயமறிந்து ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட கனிமவளத்துறை...
2010-ல் திமுக ஆட்சியை வீழ்த்து​வதற்கான தனது வியூகப் பயணத்தை கோவையி​லிருந்து தான் தொடங்​கினார் ஜெயலலிதா. அவரது வழியைப் பின்பற்றி அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமியும் ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையி​லிருந்தே தொடங்​கு​கிறார். 2006-11 திமுக ஆட்சியில் மின்வெட்டை கண்டித்​தும், அத்தி​யா​வசியப் பொருட்​களின் விலை உயர்வை கண்டித்தும் 2010-ல் கோவை வஉசி மைதானத்தில் அதிமுக பிரம்​மாண்ட ஆர்ப்​பாட்​டத்தை நடத்தியது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற அந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு ஜெயலலிதாவே தலைமை...
ராயப்பேட்டையில், கட்டுமான தொழில் அதிபரின் வீட்டில் வருமானவரி துறை, என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ராயப்பேட்டை பிரகாசம் சாலையில் வசித்து வருபவர் யாகூப். கட்டுமான தொழில் செய்துவரும் இவரது வீட்டில் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகளும், என்ஐஏ அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் இருந்த பீரோவில் ரூ.50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக...
ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கும் 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை வரும் 8-ம் தேதி சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பழங்குடியின மக்கள் தனித்துவமான கலாச்சாரங்கள் கொண்டவர்களாகவும் பிற சமூகங்களுடன் தொடர்பு கொள்ள கூச்சப்படுபவர்களாகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாகவும்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.11-ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம், சிறப்பு பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.11-ம் தேதி தமிழ்நாடு...