ராயப்பேட்டையில், கட்டுமான தொழில் அதிபரின் வீட்டில் வருமானவரி துறை, என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராயப்பேட்டை பிரகாசம் சாலையில் வசித்து வருபவர் யாகூப். கட்டுமான தொழில் செய்துவரும் இவரது வீட்டில் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகளும், என்ஐஏ அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டில் இருந்த பீரோவில் ரூ.50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் உரிய கணக்கு கேட்கப்பட்டுள்ளது.
மேலும், யாகூப்பின் வீட்டில் இருந்து ரூ.9.50 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளையும் வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.