அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில், கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, ஞான சேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஞானசேகரனின் வீடு அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, ஞானசேகரனின் அடுக்குமாடி வீட்டை வருவாய்த் துறையினர் நேற்று அளவெடுத்துச் சென்றனர். இந்த...
பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் அறிமுகம்
admin - 0
பேருந்துகளில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகப்படுத்தினார்.
சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கம்
admin - 0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் வசிக்கும் மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது வழக்கம். அந்த சமயங்களில் மக்களின் வசதிக்காக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு...
சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா: ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது
admin - 0
சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்கவிடப்படுகின்றன.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகிறது. பலூன் திருவிழாவுக்காக வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்கவிடப்படும். இந்த நிகழ்வை காணவும்,...
2025-ம் ஆண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று பால் தினகரன் தெரிவித்தார். இயேசு அழைக்கிறார் நிறுவனம் சார்பில் புத்தாண்டு ஆசீர்வாதக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இயேசு அழைக்கிறார் அமைப்பின் நிறுவனர் பால் தினகரன் தலைமை வகித்தார். அவரது குடும்பத்தினர் சாமுவேல் பால் தினகரன், ஸ்டெல்லா ரமோலா, டேனியல் டேவிட்சன் மற்றும் பேபி கேட்லின் ஆகியோர் கிறிஸ்துவப் பாடல்களை பாடி, கூட்டத்துக்கு வருகை தந்த ஏராளமான...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, புறநகரில் உள்ள துணிக் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், பெரும்பாலானோர் வரும் 10-ம் தேதி இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட திட்டமிட்டிருப்பதால், நேற்றே துணிக்கடைகளுக்கு சென்று புத்தாடைகளை வாங்கத் திட்டமிட்டிருந்தனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வட சென்னையில்,...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2024-ம் ஆண்டில் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
admin - 0
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2024-ம் ஆண்டில் மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், ரத்தவியல் நிபுணரும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணருமான அருணா ராஜேந்திரன் ஆகியோர்...
தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்கான குளிர்சாதன வசதி கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப் ஆலையில் தொடங்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையான சென்னை ஐசிஎஃப் ஆலையில் வந்தே பாரத் ரயில்கள், எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கவும்...
முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த மாணவிகளின் கருப்புநிற துப்பட்டா அகற்றம்: அண்ணாமலை கண்டனம்
admin - 0
முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பன்னாட்டு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக மாணவிகள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டாக்களை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் தாங்கள் அணிந்துவந்த கருப்பு...
தாம்பரத்தில் நடைமேம்பால பணியால் மின்சார ரயில் சேவை ரத்து: பேருந்தில் செல்வதற்காக மக்கள் கூடியதால் நெரிசல்
admin - 0
தாம்பரத்தில் நடைமேம்பாலப் பணி காரணமாக, மின்சார ரயில்கள் நேற்று காலை முதல் மாலைவரை ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் தாம்பரம் யார்டில், புதிய நடைமேம்பால பணி காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே நேற்று முன்தினம்...










