Google search engine
சென்னை ரன்னர்ஸ், ஃபிரெஷ் ஒர்க்ஸ் இன்க் ஆகியவை சார்​பில் சென்னை மாரத்​தான் போட்​டி​யின் 13-வது சீசன் போட்டி நேற்று சென்னை​யில் நடத்​தப்​பட்​டது. முழு மாரத்​தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்​தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவு​களில் போட்​டிகள் நடத்​தப்​பட்டன. இதில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்​றனர். முழு மாரத்​தான் போட்​டி​யானது, நேப்​பியர் பாலத்​திலிருந்து தொடங்கி,...
ஒரே வேலை, ஒரே ஊதியம் கோட்பாட்டின்படி எய்ம்ஸ்-க்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம்...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-ம் ஆண்டு விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்​லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்​.​காதர் மொகை​தீன் ஆகியோ​ருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்​துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்​லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்​.​காதர் மொகைதீன் ஆகியோர் நேற்று தங்களது பிறந்த நாளை கொண்​டாடினர். இதையொட்டி சமூக வலைத்​தளத்​தில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு...
காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்​படுத்துவது தொடர்பாக 5-வது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்ளது. காவல்​துறை​யினர், பணியிலும் பணியிடத்​தி​லும் பல்வேறு பிரச்​சினைகளை எதிர்​கொள்​கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை மேற்​கொள்ள முடி​யாமல், சோர்​வடைந்து மன அழுத்​தத்​துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ள​வும் செய்​கின்​றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்​க காவல்​துறை​யினருக்கு பல்வேறு திட்​டங்கள் கொண்டு வரப்​பட்​டுள்ளன. அதன் தொடர்ச்​சி​யாக, ‘காவலர் - பொது​மக்​களுக்கு இடையேயான உறவை மேம்​படுத்​த​வும், காவல்​துறை...
விழுப்பு​ரத்​தில் நடைபெற்ற மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் 24-வது மாநில மாநாட்​டில், புதிய மாநில செயலா​ளராக பெ.சண்​முகம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். முன்னதாக, திமுக அரசை விமர்​சித்து முன்​னாள் மாநில செயலாளர் கே.பால​கிருஷ்ணன் கருத்து தெரி​வித்​திருந்த நிலை​யில், அவர் மாற்​றப்​பட்டு பெ.சண்​முகம் தேர்வு செய்​யப்​பட்​டுள்ளதாக தகவல் வெளி​யாகி உள்ளது. விழுப்பு​ரத்​தில் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் 24-வது மாநில மாநாடு ஜன.3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்​றது. இதையொட்டி நடந்த பேரணி, பொதுக்​கூட்​டத்​தில்...
உண்மையை பேசும் கூட்​ட​ணிக் கட்சித் தலைவரை மிரட்டு​வது​தான் அரசியல் அறமா என திமுக​வுக்கு, தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்​ளது. பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிரசாத் வெளி​யிட்​டுள்ள அறிக்கை: சிந்து சமவெளி நாகரிகம் குறித்​தும், தமிழர் தம் பெரு​மையை போற்றும் கீழடி நாகரிகம் குறித்​தும் பெரு​மையோடு பேச வேண்டிய கருத்​தரங்​கில், சம்பந்தமே இல்லாமல் திமுக அரசு குறித்து முதல்வர் ஸ்டா​லின் பெரு​மையோடு பேசுவது வருத்​தம் தருகிறது. தமிழகத்​தில் திமுக ஆட்சிக் கட்டிலில்...
தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.,க்கள் தங்களது சட்டைகளில் 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 66 எம் எல் ஏ.,க்களும் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் பொருந்திய சட்டையை அணிந்து வந்துள்ளனர். பேரவைக்குள் சென்றதும் அவர்கள் அந்த பேட்ஜை அணிந்து கொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க...
கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி உட்பட 4 இடங்களிலும் நடத்தப்பட்டது. வேலூர்: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர்...
தேசத்​தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்​பகம் சார்​பில், ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்​கிச் சேலை’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடைபெற்​றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்​ல​கண்ணு தலைமை வகித்து, நூலை வெளி​யிட்​டார். தமிழ்​நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்​பையா நூலின் முதல் பிரதி​யைப் பெற்றுக்​கொண்​டார். தொடர்ந்து, இரா.நல்​ல​கண்​ணு​வின் 100-வது பிறந்த நாளை, கேக் வெட்​டிக்...