சென்னை மாநகராட்சியின் 203 மயானங்களில் தீவிர தூய்மைப் பணி நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 159 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணியின்கீழ் குப்பைகள், கட்டிடக் கழிவுகள், சாலையோரம் மற்றும் சாலை மையத் தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மைப் பணிகள் உள்ளிட்டவை...
மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை சிறப்பு மெட்ரோ ரயில்கள் அதிகாலை 3 மணிமுதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாரத்தான் ஓட்டம் நாளை (5-ம் தேதி) நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், மெட்ரோ ரயில் சேவை நாளை அதிகாலை 3 மணிமுதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான்...
சென்னை மியூசிக் அகாடமியின் 90 ஆண்டு கலை சேவை உலக அளவில் ஒரு சாதனை: கொரியா தூதரக தலைவர் புகழாரம்
admin - 0
மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளாக இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்கு ஆற்றிவரும் சேவை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் ஒப்பற்ற ஒரு சாதனை என்று சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன் கிம் தெரி வித்துள்ளார். மியூசிக் அகாடமியின் 18-வது ஆண்டு நாட்டிய விழா நேற்று சென்னை மயிலாப்பூர் டிடிகே அரங்கில் தொங்கியது.
சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன்கிம், விழாவை...
சென்னை விமான நிலையத்தில் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையத்தின் புறப்பாடு, வருகை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவசர காலங்களில் உபயோகப்படுத்துவதற்காக தீயணைப்பான் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கருவிகளை, விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆஃப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து...
முதல்வர் காப்பீட்டு திட்ட நிதி குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு
admin - 0
முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 44 துறைகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சொர்க்க வாசல்: ரூ.500 தரிசன சீட்டு; 500 பேருக்கு இலவசம்
admin - 0
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய ரூ.500-க்கு கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும் எனவும், முதலில் வரும் 500 பேர் இலவசமாக சொர்க்க வாசல் தரிசனம் பெறலாம் எனவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்...
மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் தொழில்நுட்ப கருவிகள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்க ‘பாஷினி’ என்ற திட்டத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, வாராணசியில் நடைபெற்ற ‘காசி தமிழ்...
தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நெல்லை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின்...
அரசு ஊழியர், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: ரூ.164 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு
admin - 0
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’, ‘டி’ பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பு ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-24-ம் நிதி ஆண்டில் குறைந்தபட்சம்...
கனிம மூலப் பொருட்களான மணல், ஜல்லி, எம்.சாண்ட் செங்கல் போன்றவை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்படுவதால், இதற்கு தீர்வுகாணும்படி தமிழக அரசுக்கு அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னையில் அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது: தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளை ஈர்த்தும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியும் சிறப்பாக செயல்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் வளர்ச்சிப் பணிகள் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. அதற்கான...










