முதல்வர் காப்பீட்டு திட்ட நிதி குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு

0
21

முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 44 துறைகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர பிற மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. அதற்கான செலவுகள் காப்பீட்டு நிதியிலிருந்து சரிசெய்யப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் நிதியானது, சிகிச்சை செலவு, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, மருத்துவமனை மேம்பாடு என பல்வேறு விகிதங்களில் பிரிக்கப்படுகிறது.

இந்நிலையில், காப்பீட்டு நிதி முறையாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆய்வின்போது, சில துறைகளில் முதல்வர் காப்பீட்டு நிதி பயன்பாட்டில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here