அமைதிக்கு பேர் போன செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்திருப்பது அதிமுக-வுக்குள் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ‘இந்து தமிழ் திசை’க்கு செங்கோட்டையன் அளித்த நேர்காணலில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைப்பது தொடர்பான பேச்சு நடக்கிறது” என உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் - இபிஎஸ்சை சந்தித்தது உண்மைதான்...
அதிமுகவும் காங்கிரசும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது ஏன்? – குமுறும் தேவேந்திர குல வேளாளர்கள்
admin - 0
தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். ஆனபோதும் சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முக்கிய கட்சிகள் அளிக்கவில்லை என்பது இந்த மக்களின் நெடுநாளைய ஆதங்கமாக இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தான் பட்டியல் சமூகத்தின் 7 உட்பிரிவு களை ஒருங்கிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம்’ என மத்திய பாஜக அரசு, அரசாணை பிறபித்தது.
இதன் தொடர்ச்சியாக மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தேவேந்திர...
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வருகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு
admin - 0
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அத்திக்கடவு-அவிநாசி 2-வது திட்டம் நிறைவேற்றப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்ததாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பினர் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பழனிசாமி பேசியதாவது:
60 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிறவிப் பயனை...
தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மின்வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சுகாதாரத் துறை செயலராக இருந்த சுப்ரியா சாஹு உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை ஏற்படுத்த வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளையகண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை...
போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ல் ஆர்ப்பாட்டம்
admin - 0
போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடங்கிய போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கடந்த 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல்...
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்: மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டாக வேண்டுகோள்
admin - 0
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதவெறி அமைப்புகளை தமிழக மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் பன்மைத்துவத்துக்கும், மதநல்லிணக்கத்துக்கும்...
தமிழக மாணவர்களுக்கு வரவேண்டிய ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு அளிப்பதா? – மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்
admin - 0
தமிழக மாணவர்களுக்கு உரிய ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்கு எதிரான மத்திய பாஜக அரசின் விரோத மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போகிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழி கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழக மாணவர்களுக்குரிய...
திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? – அண்ணாமலை கேள்வி
admin - 0
திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். தமிழக அரசின் கொள்கை குறிப்பில், கடந்த 2021-22 முதல் 2023-24 வரை தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன்...










