சென்னை | அதிமுக மாணவர் அணியினர் கைது

0
20

பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவர் அணியினரை போலீஸார் கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2-ம் ஆண்டு மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பு நேற்று காலை அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களின் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

எனவே, தடையை மீறிய போராட்டம் நடத்த முயன்றதாக 153 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here