Google search engine
பின்தங்கிய, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் சேவையை எளிதாக வழங்கும் நோக்கில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எடுத்து வருகிறது. இந்நிலையில், தொலைதூரம் மற்றும் கிராமப் பகுதிகளில்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான தி.நகர் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘பெலிகன்’,ஜூன் மாதத்தில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே பணியை முடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், ஒரு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை திருப்பி கொடுக்க தனிப்படை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக்கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் எம்.அசீப் மற்றும் சில பத்திரிகையாளர்கள் தரப்பில்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த...
2024 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி கிட்டும் என அதிமுக தீர்க்கமாக நம்பிய தொகுதி கள்ளக்குறிச்சி. அப்படிப்பட்ட தொகுதியில் திமுக வலுவான வேட்பாளரை தேடிப்பிடித்து நிறுத்தும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பேரூர் கழகச் செயலாளரான மலையரசனை நிறுத்தியது திமுக. இவரை அடையாளம் காட்டியவர் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன். புதுமுகம் என்றபோதும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார் மலையரசன். இப்போது,...
2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது. இதற்கான வேலைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சர்ச்சையாகி இருக்கிறது. கோவை ஒண்டிப்பு​தூரில் திறந்​தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் சுமார் 20.72 ஏக்கரை ஒதுக்​கித்தான் கிரிக்கெட் மைதானம் அமைக்​கப்​படு​கிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் என்ற பெயரில், கோவையில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டி...
பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மாநில உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு எடுத்து வரும் முயற்சிகளை நிதிநிலை அறிக்கை முற்றாக நிராகரித்து, புறக்கணித்துள்ளது. அரசியல் காரணங்களை...
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், இதை தடுக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளன. கோயிலுக்கு இந்து பக்தர்களும், தர்காவுக்கு இஸ்லாமியர்களும் சென்று வழிபட்டு வந்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள்...
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக வனத் துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக...
புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலக அளவில் மிக ஆபத்தான உடல்நல பிரச்சினைகளில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. தற்போது புற்றுநோய் பாதிப்புடன்...