Google search engine
அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: திருவள்ளூரில் திமுக அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இருமொழி கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே...
போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் ஈடுபட்டுள்ளார் என அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவி்த்து உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி அவரை கடந்தாண்டு ஜூனில் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில்...
கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் வே.ராஜாராமன் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: சிலப்பதிகாரம் என்னும் பெருங்காப்பியத்தை தமிழுக்கு தந்து அழியாப் புகழ் பெற்ற இளங்கோவடிகளுக்கு கேரளத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய வேண்டும் என்பது கேரளம் வாழ் தமிழர்களின் நீண்ட கால விருப்பம். அந்த வகையில் கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள்...
தமிழகத்​தின் ஆழ்கடல் பகுதி​யில் ஹைட்ரோ கார்பன் எடுக்​கும் திட்​டத்​துக்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்​டும் என பாமக, அமமுக கட்சிகள் வலியுறுத்​தி​யுள்ளன. இதுதொடர்பாக அவர்கள் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாமக நிறு​வனர் ராமதாஸ்: தமிழகத்​தின் நிலப்​பகு​தி​களி​லும் கடல்​பரப்​பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்​ப​தற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்​கப்​பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்​புக்கு பின்னர் நிறுத்​தப்​பட்டன. இந்நிலை​யில், மத்திய பெட்​ரோலிய அமைச்​சகத்​தின், ஹைட்ரோ கார்பன் எடுப்​ப​தற்கான...
தென் மாவட்​டங்கள் மற்றும் தஞ்சாவூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்​தில் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறு​பாடு காரணமாக இன்று (பிப்​.28) கடலோர மாவட்​டங்​களில் பெரும்​பாலான இடங்​களி​லும், உள் மாவட்​டங்​களில் சில இடங்​களி​லும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். கன்னி​யாகுமரி, திருநெல்​வேலி, தென்​காசி, தூத்​துக்​குடி, விருதுநகர், ராமநாத​புரம், புதுக்​கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது. நாளை...
தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்தின் மூலம் 11,507 கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாரத் நெட்’ திட்டம், இந்தியாவின் அனைத்து கிராமங்களையும், கிராம பஞ்சாயத்துகளையும் டிஜிட்டல் முறையில் இணைப்பதற்கான பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதன்படி, நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் இணைத்து, அனைத்து கிராம...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் ஒட்டப்​பட்ட சம்மன் கிழிக்​கப்​பட்ட விவகாரத்​தில், பாது​காவலரை போலீஸார் இழுத்​து சென்​ற​தால் பரபரப்பு ஏற்பட்​டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் சீமான் மனு தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம்,...
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு ரூ.40 லட்சத்துக்கான நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் எஸ்.சின்னதம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை ஜி.எஸ்.மணி, ஏ.என்.பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி...
மும்மொழி தொடர்பான விவகாரத்தில், மேடையில் பேசுவதை முதலில் விஜய் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், எங்கள் கட்சிக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி. மக்களவைத் தொகுதி...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்ப்பு முகாம் இன்று (27-ம் தேதி) நடைபெறுகிறது. இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும்...