அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும் (10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்),...
உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரியில் மாணவர் தூதுவர் குழு
admin - 0
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரியில் உறுப்பு தான மாணவர் தூதுவர் குழு நேற்று தொடங்கப்பட்டது. அதற்கான இலச்சினையை கல்லூரி முதல்வர் டீன் தேரணிராஜன், துணை முதல்வர் கவிதா ஆகியோர் வெளியிட்டனர்.மருத்துவ கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், இளநிலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து உடல்...
3000 வேலைவாய்ப்புகளுடன் எல்காட் நிறுவனத்தின் ஐடி டவர் சோழிங்கநல்லூரில் விரைவில் திறப்பு: அமைச்சர் பிடிஆர்
admin - 0
சென்னையில் 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளுடன் எல்காட் நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் ஐடி டவர் விரைவில் திறக்கப்படும் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
இதுதொடர்பாக தொழில்நுட்பத் துறைஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத்தின் முதலீட்டு இலக்காக நிலைநிறுத்தும்...
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அரசுப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் கூறியதாவது: சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 600 பேருந்துகளை வாங்கி...
மொழிக்கொள்கை விஷயத்தில் இருமொழிக் கொள்கைதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு’ என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகம் சார்பில் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், சி.பொன்னையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக வேந்தர் கோ.விசுவ நாதன் பேசியதாவது: நான் திமுகவில் இருந்து தாமதமாகத்தான் அதிமுகவுக்கு வந்தேன். அதிமுகவை...
கரூர், பெரம்பலூரில் ரூ.5,000 கோடியில் காலணி தொழிற்சாலைகள்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
admin - 0
கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தி்ட்டங்களை நிறுவ, எவர்வான் கோத்தாரி புட்வேர் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும்...
தவெக எளிய மக்களுக்கான கட்சி, பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவதே முதல் பணி என்று தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷார், தலைமை நிலைய செயலாளர்...
அன்பில் மகேஸ் Vs வானதி சீனிவாசன்: மும்மொழிக் கொள்கை ‘நோக்கம்’தான் என்ன? – கேள்விகளும் பதில்களும்
admin - 0
“இன்னொரு மொழிப்போருக்கு தயாராவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் போர்க்குரல் எழுப்பும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் அனலடிக்கின்றன. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொகுப்பாக இங்கே…
முதலில், வானதி சீனிவாசனின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் அன்பில்...
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத் தில் பாமக பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் அன்புமணி பேசும்போது, “கல்வியை கட்டணமின்றி தர வேண்டியது அரசின் கடமை. ஆனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு மொழி என்பதுதான் பாமகவின் மொழிக் கொள்கை. பிற மொழிகளைக்...
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க இந்த அரசு இருக்கிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில்...










