மரங்களை வெட்டித்தான் மைதானம் அமைக்க வேண்டுமா..? – கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடிய சர்ச்சை

0
43

2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது. இதற்கான வேலைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் சர்ச்சையாகி இருக்கிறது.

கோவை ஒண்டிப்பு​தூரில் திறந்​தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் சுமார் 20.72 ஏக்கரை ஒதுக்​கித்தான் கிரிக்கெட் மைதானம் அமைக்​கப்​படு​கிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் என்ற பெயரில், கோவையில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டி அழிக்​கப்​பட்டு விட்டன. இச்சூழலில், நகரின் முக்கிய பசுமைப் பகுதியான திறந்​தவெளிச் சிறைச்​சாலையில் உள்ள நூற்றுக் கணக்கான மரங்களை கிரிக்கெட் மைதான திட்டத்​துக்காக அழிக்கப் போகிறார்களே என ஆதங்கப்​படு​கிறார்கள் பசுமை பாதுகாவலர்கள்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு விவசா​யிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனி​சாமி, “1981-ல் ஒண்டிப்பு​தூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்​தவெளி சிறைச்சாலை அமைக்​கப்​பட்டது. இங்கு இப்போது 950 தென்னை மரங்கள் உள்ளன. வேறு சில மரங்களும் உள்ளன.

தவிர, காய்கறிகளும் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்​படு​கிறது. கிரிக்கெட் மைதானம் அமைவதால் இங்குள்ள விவசாய கட்டமைப்புகள் பாதிக்​கப்​படும். போக்கு​வரத்து நெரிசலும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த இடத்துக்குப் பதிலாக நீலாம்​பூர், சின்னி​யம்​பாளையம் உள்ளிட்ட ஏதாவதொரு பகுதியில் மைதானத்தை அமைத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது; கோவையின் பசுமைக்கும் பங்கம் வராது” என்றார்.

இதுகுறித்து பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக செயலா​ள​ரும், சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்​ஏ-வுமான நா.கார்த்திக், “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றி​யுள்ளது. இதன் மூலம் விளையாட்டுத்​துறையில் கோவை அடுத்த கட்டத்​துக்கு முன்னேறிச் செல்லும். விளையாட்டுத்​துறையில் கோவைக்கு பெரிய அங்கீ​காரம் கிடைக்​கும். மைதானம் அமைந்தால் அது பலதரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்​கும்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்​துக்கு ஏற்ற இடமாக இந்த இடம் தேர்வு செய்யப்​பட்​டுள்ளது. இதனால் போக்கு​வரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்​பில்லை. வெட்டப்​படும் மரங்களுக்கு மாற்றாக அதைவிட கூடுதலான மரக் கன்றுகள் நடப்பட்டு வளர்க்​கப்​பட்டு வருகின்றன. அதனால் கோவையின் பசுமைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் வராது” என்றார்.

மாவட்ட ஆட்சியர் கிராந்​தி​குமார் பாடியோ, “சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்​தவெளிச் சிறைச்சாலை வளாகத்தில் தான் அமைகிறது. அங்குள்ள மரங்கள் வெட்டப்​படும் போது அதற்கு ஈடாக லட்சக் கணக்கில் மரக் கன்றுகள் நடப்பட்டு கோவையின் பசுமைச் சூழல் பாதுகாக்​கப்​படும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் கிரிக்கெட் மைதானத்​துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்டு வருகிறது. மண் பரிசோதனை செய்யப்​பட்​டுள்ளது.

அரசு ஒப்புதல் அளித்த பின்னர் அடுத்​தடுத்த பணிகள் மேற்கொள்​ளப்​படும்” என்கிறார். தங்க நாற்கர சாலை திட்டத்​திற்காக, நூற்றாண்டு கண்ட மரங்களை வெட்டி​விட்டு பதிலாக சாலை நடுவே பூச்செடிகளை வைத்து சமாளித்தது போல் அல்லாமல் சம்பந்​தப்​பட்​ட​வர்கள் நி​யாயமாக சிந்​திக்​கட்​டும்​!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here