திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்து முன்னணி தொண்டர்கள் செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று (பிப்.3) போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்து முன்னணி தான் யாராவது ரயில் மூலம் திருப்பரங்குன்றம் செல்கிறார்களா என்பதை அவர்கள் கண்காணித்தனர்.