கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை வாலிபர்கள் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த வாலிபர்களை பொதுமக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.