கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணி
admin - 0
கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் விவசாயிகள் பேரணி நடத்தினர். தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது.
எழும்பூர் சித்ரா திரையரங்கம் முதல் எல்.ஜி. சாலை சந்திப்பு வரை நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நேரடியாகவும், ஊடகங்களுக்குத் தெரியாமலும் ரகசியமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் சீர்திருந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
திருச்சி திருவானைக்காவலில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.ரமேஷ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு கோபுரம் சீரமைப்புப் பணிகளில் தாமதம் நிலவி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம்....
தவெக எம்எல்ஏ.விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு: முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு
admin - 0
பேரவைத் தலைவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும்போது ஆதரவாக வாக்களித்தால் ரூ.35 கோடி தருவதாகக்கூறி தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய நபர்களாகக் கருதப்படும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள...
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோயமுத்தூர் அடுத்த மதுக்கரை அருகே தல்மனம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகளுக்கு கடந்த 4-ம் தேதி வந்த 2 லாரிகளை வழிமறித்து பார்த்தபோது, மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் 500 பாரத் யூரியா மூட்டைகள் இருந்தன.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வேளாண்மைத் துறையினர் உர மூட்டைகளைப் பறிமுதல் செய்து, தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது,...
திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு குறித்து ஜூலை 21 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
admin - 0
திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 21 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனக் கட்டணம், சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவை கோயில் தக்கார் அல்லது அறங்காவலர் குழு தீர்மானத்தின்...
தமிழக ஆளுநருக்கு புதிய பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக (எஸ்.பி) ரகுபதி ஐபிஎஸ் பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் மாற்றப்பட்டு, புதிய பாதுகாப்பு அதிகாரியாக வி.பிரசன்னகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
admin - 0
புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென, முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், தினமும் 110 எம்எல்டி மற்றும் 150 எம்எல்டி உற்பத்தித் திறன் கொண்ட 2 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதன்மூலம், தென்சென்னை பகுதிகளில் வாழும் சுமார் 20 லட்சம்...
சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை
admin - 0
பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீதும், சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்கும் பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் துறையினருடன், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இணைந்து, சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்காக 300 தடுப்பான்களை (பேரிகார்டுகள்) வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, ஹுண்டாய்...
அண்ணாநகரில் மதுபான சுவைகளில் ஐஸ்கிரீம் விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை மேற்கு அண்ணா நகர் வெல்கம் காலனி பகுதியில் பிரபல ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது இந்தக் கடையில் ஒயின், வோட்கா, விஸ்கி, ரம் போன்ற உலகத் தரம் வாய்ந்த மதுபானங்களின் சுவைகளில் (Flavors) ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை...
த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசியதன் பின்னணியில், ஸ்டாலினின் உத்தரவு எதுவுமே இல்லை. இந்த தகவல் அறிந்து, கோபம் அடைந்த ஸ்டாலின், அவசர ஆலோசனை நடத்தினார். அதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட நெருங்கிய வட்டத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.அப்போது, 'தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைக்கும்...










