கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கலுக்கு எதிரான மனுக்கள் மீது நாளை விசாரணை
admin - 0
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணைக்கு வருகின்றன.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கும் விழா கரூரில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
இந்நிலையில் இதற்கு தடை கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும்...
முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை அதிமுகவின் பெரும்பாலோனோர் தவெகவில் தஞ்சம் புகுந்துள்ளனர். தவெகவை முற்றிலுமாக அதிமுகவினர் ஆக்கிரமித்து வருவதால், அக்கட்சியின் ‘அசல்’ நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தவெகவில் இப்போது கூட்டம் எங்காவது நடக்குமானால், அங்கு நிற்கும் நபர்களை பார்த்துவிட்டு, அது அதிமுக கூட்டமா, தவெக கூட்டமா என யோசிக்கும் அளவுக்கு, அதிமுகவினர் வேகவேகமாக தவெக பக்கம் தாவி வருகின்றனர். இதனை ஆமோதிப்பது போல அதிமுகவும், தவெகவும்...
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் வருகிறார். அப்போது 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ செல்கிறார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் தனியார் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், கருணை அடிப்படையில் 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்குகிறார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில்...
இனிவரும் காலங்களில் பள்ளிகளின் அனுமதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, பிறந்தநாள் விழாக்கள் அல்லது அரசு சாராத எந்த வொரு நிகழ்ச்சியும் பள்ளிகளில் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறிவுப்பண்ணைகள் கல்விக்கூடங்கள் என்பவை காட்சிக் கூடங்கள் அல்ல; அதேபோல் பள்ளிகள் அரசியல் மேடைகளும் அல்ல. அவை அடுத்த...
“ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தெரியாதவர்கள் தான் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழகத்துக்கே தலைகுனிவு” என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்வி...
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வரை நேரில் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சை பெறும் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று தமிழக முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செயலர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மருத்துவமனைக்குள் சென்ற முதல்வர், பல்வேறு வார்டுகளை பார்வையிட்டார்.
பிரசவத்துக்காக காத்திருக்கும் பெண்கள், பிரசவித்த...
மின்வாரிய ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு விவரம்:
தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி கழகம், பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம், பசுமை எரிசக்திக் கழகம் ஆகிய அனைத்து பிரிவு ஊழியர்களும் அலுவலக வளாகத்துக்குள் நுழையும்போதும், பணி நேரத்திலும் அடையாள அட்டையை வெளியில் தெரியும்படி கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு பணியாளர்கள், அதிகாரிகள் சோதனையிடும்போது தயக்கமின்றி அடையாள அட்டையைக்...
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் ஜூலை 15-ம் தேதி இருதரப்பினரும் போராட்டங்களை அறிவித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கர்நாடக...
விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்காக ‘கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்’ எனும் புதிய திட்டத்தை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழக வேளாண்மை துறை ‘கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்’ எனும் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், காணொலி வாயிலாக விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தளத்தில் தீர்வு வழங்க மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வேளாண் மற்றும் அதுசார்ந்த தோட்டக்கலை, மீன்வளம், பால்வளம், வேளாண்மைப்...
ஓராண்டில் பழநி கோயில் வருமானம் ரூ.100 கோடியை தாண்டியது: பஞ்சாமிர்தம் மட்டும் ரூ.63 கோடிக்கு விற்பனையாகி சாதனை
admin - 0
கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு கட்டண சேவைகள் மூலம் பழநி மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது தவிர, பஞ்சாமிர்தம் மட்டும் ரூ.63.16 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டண சேவைகளை வழங்கி வருகிறது....










