தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை நடத்தி வரும் நிரந்தர, தற்காலிக அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்கள் ஜூலை 19-ம் தேதிக்குள் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) ஏ.ராஜ்நந்தினி அனுப்பிய சுற்றறிக்கை: நிரந்தர மற்றும் தற்காலிக அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து வணிகவியல் பயிலகங்களும் (தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள்) ஆண்டு அங்கீகார புதுப்பித்தலுக்கு http://tims.tndtegteonline.in என்ற இணைதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பத்தை ஜூலை...
தமிழகம் முழுவதும் நச்சுக்கழிவு மேலாண்மை நிலையங்களில் தீயணைப்பு துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த தணிக்கை நடத்த வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நச்சுக்கழிவு மேலாண்மை நிலையத்தில், ரசாயனக் கழிவுக் குவியல் ஒன்றில் தீப்பிடித்ததாகவும், அதனால் நச்சுப் புகையானது கிராமங்களைச் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தேசிய பசுமை...
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன.
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று முன்தினம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 தமிழர்கள், 3 ஆந்திர மாநிலத்தவர், 2...
எழும்பூர் அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்துக்கு மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் கடந்த 8-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, முதல்வர் என்ற அதிகார தோரணை எதுவும் இல்லாமல், தாய்மார்களுடன் சாதாரணமாக பேசியதையும், குழந்தைகளை தன் கைகளில்...
மாதவரம் அருகே பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிப்பதற்காக ராட்சத டிரில்லிங் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, இயற்கை எரிவாயுக் குழாய் உடைந்து வாயுக் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து தீப்பிடித்ததில் 6 கடைகள், ஒரு லாரி மற்றும் ஒரு வேன் எரிந்து சேதமடைந்தன.
சென்னை மீஞ்சூர் அருகே கொண்டக்கரை பகுதியிலிருந்து சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த எரிவாயு குழாய்...
விபத்து, வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கும் நடைமுறை நல்லதுதான்: திருமாவளவன்
admin - 0
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர் விசிக தலைவர் திருமாவளவனை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலும் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்புகளுக்கு பின் செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: மரியாதை நிமித்திமாக இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்திய கூட்டணியில் மிக முக்கியமான அங்கமாக விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
காவிரி விவகாரத்தை...
தமிழக அரசின் பொதுத்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக வீடுகளின் பட்டியல் தயாரித்தல், வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரையும் 2-வது கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி 2027 பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட அரசு...
கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க ஐகோர்ட் நிபந்தனை
admin - 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி, தற்காலிகப் பணியாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: கரூரில் தவெக சார்பில் கடந்தாண்டு நடந்த பிரச்சாரக்கூட்டத்தில்...
கரூர் கூட்ட நெரிசலில் 37 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் உயிரிழந்த நிலையில், 31 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலையும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் கருணை தொகையும் வழங்கப்பட்டது.
மீதம் உள்ள 5 குடும்பங்களில் மனைவி சுகன்யாவை இழந்த தெய்வேந்திரன் காவல்துறையில் பணியாற்றுவதாலும், மற்றொருவர் அரசு பணியில் உள்ளதாலும், ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதாலும், அவர்களின் குடும்பங்களில் யாருக்கும் அரசு வேலை...
கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் பேட்டரி ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து
admin - 0
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.15,037 கோடி முதலீட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (பேட்டரி) உற்பத்திக்காக முதல்வர் விஜய் முன்னிலையில் விக்ரம் சோலார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரகடம், வல்லம் ஆகிய 2 இடங்களில் சூரியஒளி மின்னழுத்த (Solar PV) தொகுதி உற்பத்தி ஆலைகளை விக்ரம் சோலார் குழுமம் நிறுவியுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த...










