ஹெலிகாப்டர் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
admin - 0
ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் அனுமதி உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையதளம் மூலமாக 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்வரும் அனுமதிகளுக்காக விண்ணப்பிக்கும் போது, சுவிதா( Suvidha) என்ற இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகைய விண்ணப்பங்கள்...
‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிச் சான்று: கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு
admin - 0
‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச் சான்று வழங்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மின்னஞ்சலில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை,...
ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்குடியின மக்களின் கோயிலில், நார்ஸ்னர்ஸ் எனப்படும் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இத்திருவிழாவில், 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான தோடர் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பணியர் ஆகிய ஆறு வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் தோடர் பழங்குடியின மக்கள் மந்து என்று அழைக்கப்படும் கிராமங்களில்...
திமுகவுக்கு தடை இல்லை. எங்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதில்லை என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தவெக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்கள் தங்களுக்கு திட்டமிட்டு பிரச்சார அனுமதி மறுக்கப்படுவதாக திருவள்ளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தவெக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனுமதி...
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸாரை இடமாற்றம் செய்ய வேண்டும்: அதிமுக பேச்சாளர் கல்யாணசுந்தரம் வலியுறுத்தல்
admin - 0
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் கல்யாணசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு எனக்கு கடந்த 28-ம் தேதி சம்மன் வந்தது. கடும் பணிச்சூழலுக்கு இடையிலும்,...
அம்பத்தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்டன் குடியிருப்பு பகுதியில் உரிய ஆவணங்களின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.22 கோடியை நேற்று முன் தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் விநியோகிப்பதை தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள கும்மிடிப்பூண்டி, மாதவரம், திருத்தணி உள்ளிட்ட 10 சட்டப்பேரவை...
திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் திருத்தேர் திருவிழாவில் தேர் கவிழ்ந்து, அர்ச்சகர் காயமடைந்த சம்பவம், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே திருப்பாலைவனம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான லோகாம்பிகாதேவி சமேத திருப்பாலீஸ்வரர் கோயில். முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயிலில் கடந்த 23-ம்...
தாம்பரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா திமுக? – தட்டிப் பறிக்க தயாராகும் அதிமுக
admin - 0
செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன.
இந்த 3 தொகுதிகளிலும் கடந்த இரண்டு தேர்தல்களில் திமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் செங்கல்பட்டு, தாம்பரம் தொகுதிகளில் திமுக சார்பில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2 தேர்தலிலும் தோல்வி அடைந்த, அதிமுகவின் கே.பி.கந்தன், 3-வது முறையாக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் தொகுதியில் 3 முறை...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
அதன் விவரம்: ஆர்.கே.நகர் தொகுதிக்கு டி.எச்.சாலையில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும்...
பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் ஆட்சேபம்
admin - 0
சிறுவனைக் கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு விஜயயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மகளைத் தேடி தனுஷ் வீட்டுக்குச் சென்ற...










