சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்காக மாநகராட்சி - பெருநிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக, பொது மக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக பாதுகாப்புடன் கூடிய அதிநவீன குளிரூட்டப்பட்ட (ஏசி) பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ் நகரின் 11 முக்கிய இடங்களில் இந்த நவீனப்...
தமிழக காவல் துறையில் புதிதாக பணியில் சேர்ந்த 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு: ஐபிஎஸ் அதிகாரியான அன்ஜித் ஏ நாயர் தூத்துக்குடி உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், பி.அங்கிதா பட்டுக்கோட்டை உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், எஸ்.அஸ்வினி திருச்செங்கோடு உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், பிஸ்வஜித் பாண்டா திருநெல்வேலி ஊரக உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சத்ரியா...
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. கடந்த மாதம் (ஆகஸ்ட்) சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு - 2026’ நடைபெற்றது....
செப்.6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசனை
admin - 0
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் செப்.6-ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். சி.வி.சண்முகம் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் தனி...
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, இனி ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பால் உற்பத்தி கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதைக் கருத்தில்கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள்...
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக - அதிமுக நிர்வாகிகள் இடையே நடந்த நிகழ்வு அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சட்டப்பேரவையில் நடைபெற்றுவரும் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே எம்எல்ஏக்கள் அவைக்கு வருகை தந்தனர். அப்போது, திமுக எம்எல்ஏ சேகர்பாபுவும், அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாக நடந்து வந்தனர்.
யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டே வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திடீரென தனது போனை சேகர்பாபுவிடம்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டும்: துரைப்பாக்கத்தில் அன்புமணி, சவுமியா விழிப்புணர்வு பிரச்சாரம்
admin - 0
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்கை செய்யக்கோரி, சென்னை துரைப்பாக்கத்தில் அன்புமணி, சவுமியா ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகரை பெருவெள்ள ஆபத்தில் இருந்து காக்க, நிலத்தடி நீர்வளம் பெருக்க, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கிமீ கட்டுமானம் தவிர்க்க “பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்கை” செய்யக்கோரி நேற்று பாமக தலைவர் அன்புமணி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும் தருமபுரி தொகுதி எம்எல்ஏவுமான...
எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத் தூள் விற்க தடை: இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் உத்தரவு
admin - 0
எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் பெருங்காயத் தூள் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
உணவுப் பொருள் தயாரிப்பில் பிரபலமான எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ், லால்ஜி கோதூ (எல்ஜி) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத் தூள் தரமற்றவை என்றும், விதிகளை மீறி உற்பத்தி செய்யப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து...
நேபாளத்தில் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ள 219 தமிழர்கள் இன்று நள்ளிரவு சென்னை திரும்புவார்கள்: அமைச்சர் தகவல்
admin - 0
நேபாள வெள்ளத்தில் சிக்கிய பிறகு மீட்கப்பட்ட 219 தமிழர்கள் இன்று நள்ளிரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா சென்ற ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரை சென்ற...
“போதை குற்றங்களை தடுக்க தவெக அரசு மேம்போக்காக செயல்படுகிறது” – இந்து முன்னணி குற்றச்சாட்டு
admin - 0
‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் நடமாட்டம், போதையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். கடந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கருதியது இந்த போதை குற்றங்கள் தான் முதன்மையானது ஆகும். இந்த ஆட்சியிலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து போதை பொருளின் நெட்வொர்க்கை கண்டறியாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது’ என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்...









