மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்களை ஆகஸ்ட் 30 வரை இடமாற்றம் செய்ய தடை

0
14

தமிழக அரசின் பொதுத்​துறை செயலர் காகர்லா உஷா வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் மக்கள்தொகை கணக்​கெடுப்​புப் பணி 2 கட்​டங்​களாக செயல்​படுத்​தப்பட உள்​ளது.

முதல்​கட்​ட​மாக வீடு​களின் பட்​டியல் தயாரித்​தல், வீட்​டு​வசதி கணக்​கெடுப்பு பணி​கள் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை​யும் 2-வது கட்​ட​மாக மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புப் பணி 2027 பிப்​ர​வரி 1 முதல் மார்ச் 31 வரை​யும் மேற்​கொள்​ளப்பட உள்​ளது.

மக்​கள் ​தொகை கணக்​கெடுப்​புப் பணிக்கு தேர்​வுசெய்​யப்​பட்ட அரசு ஊழியர்​களை இந்த பணி முடிவடை​யும் கால​மான 2027 மார்ச் 31 வரை இடமாற்​றம் செய்ய வேண்​டாம் என மாநில அரசுகளை மத்​திய உள்​துறை அமைச்​சகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பின் முதல்​கட்ட பணி​யான வீடு​களின் பட்​டியல் தயாரிப்பு பணி ஜூலை 10-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் அறி​வுறுத்​தலை ஏற்​று, 2027 மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணி​யில் ஈடு​படும் அரசு அலு​வலர்​கள் மற்​றும் ஊழியர்​களை ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இடமாற்​றம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here