சென்னை காவல்துறையில் ஊழல் ஒழிப்பு வேட்டை: ஒரே வாரத்தில் எஸ்ஐ உட்பட 5 பேர் மீது நடவடிக்கை

0
20

சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின் பேரில், காவல்துறையில் நில​வும் முறை​கேடு​களைக் கண்​காணிக்​க​வும் தடுக்​க​வும் சமீபத்​தில் ஒரு பிரத்​யேக ‘ஊழல் ஒழிப்​புப் பிரிவு’ தொடங்​கப்​பட்​டது.

காவலர்​கள் தரப்​பில் லஞ்​சம் கேட்​கப்​பட்​டால், அதுகுறித்து பொது​மக்​கள் புகார் தெரிவிக்க 78717 23000 என்ற தொலைபேசி எண் அறிவிக்​கப்​பட்​டது. புகாரளிப்​பவர்​களின் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​றும் உறுதி அளிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த அறி​விப்பு வெளி​யான முதல் வாரத்​திலேயே 20-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் வந்​துள்​ள​தாக ஊழல் ஒழிப்​புப் பிரிவு தெரி​வித்​துள்​ளது. இந்​தப் புகார்​களின் மீது மேற்​கொள்​ளப்​பட்ட துரித விசா​ரணை​யில் சிக்​கிய எஸ்ஐ உட்பட 5-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் மீது உடனடி நடவடிக்​கைகள் பாய்ந்துள்​ளன.

குறிப்​பாக, பறி​முதல் செய்​யப்​பட்ட இருசக்கர வாக​னத்தை விடுவிக்க லஞ்​சம் கேட்ட போக்​கு​வரத்​துப் பிரிவு உதவி ஆய்​வாளர் (எஸ்ஐ) மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், ஓய்​வு​பெற்ற அதி​காரி​களுக்கு ஓய்​வூ​தி​யத் தொகையை வழங்க லஞ்​சம் கோரிய சென்னை காவல் ஆணை​யர் அலு​வலக ஓய்​வூ​தி​யப் பிரிவு காவலர் ஒரு​வர் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

அது​மட்​டுமில்​லாமல், லஞ்​சப் புகாரில் சிக்​கிய மேலும் சில காவலர்​கள் மீது விசா​ரணை நடை​பெற்று வரு​வதோடு, உரிய ஒழுங்கு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக காவல்​ துறை வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here