Google search engine
வட மாவட்டங்களில் தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி...
திண்​டுக்​கல், தேனி மாவட்ட ஆட்​சி​ய​ராக இருந்த ஐஏஎஸ் அதி​காரி வெங்​க​டாச்​சலத்​தின் விருப்ப ஓய்வு ஆவணங்​களை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கொடைக்​கானலைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திண்​டுக்​கல், தேனி மாவட்ட முன்​னாள் ஆட்​சி​யர் வெங்​க​டாச்​சலம். இவர் 2012 பிப்.29 முதல் 2018 பிப்.24 வரை ஆட்​சி​ய​ராக இருந்த காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு புகார் அனுப்​பினேன். புகாரின்​பேரில்...
கோ​யில் சொத்​துகளை பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் உள்ள அதி​காரி​கள் அதில் தவறு இழைக்​கக்​கூ​டாது என அறநிலை​யத்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் அறி​வுரை வழங்​கி​யுள்​ளது. இதுதொடர்​பாக திருத்​தொண்​டர் அறக்​கட்​டளை தலை​வ​ரான சேலம் ஏ.ரா​தாகிருஷ்ணன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘சென்னை மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயி​லில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும் அறு​பத்து மூவர் உலா மற்​றும் பிரம்​மோற்​சவம் போன்ற திரு​விழாக்​களின் வரவு - செலவு கணக்கு விவரங்​களை இந்து சமய...
இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும்...
சென்​னை​யில் நடை​பெறும் ஐபிஎல் போட்​டியைக் காண வரும் ரசிகர்​களின் வசதிக்​காக, போட்டி நடை​பெறும் நாளன்று மெட்ரோ ரயில்​களில் இலவச​மாக பயணிக்​கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்​டி​யில் சென்னை சூப்​பர் கிங்ஸ் மற்​றும் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் வரும் மே 10-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் மோதவுள்​ளன. இதையொட்​டி, ரசிகர்​களுக்கு தடையற்ற பயண...
தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால்...
தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக கூறிவருவது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூறிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை அளிக்காத நிலையில், ஆளுநர், சட்டப்படி...
 நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஓர் அறையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு திடீரென புகை வெளியேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர்கள் காளீஸ்வரன் (23), சபரிநாதன் (24) ஆகியோர் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு...
தென்கோடி மாவட்டத்தில் மலர் கட்சியின் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக 3 தவணைகளில் ‘தேர்தல் நிதி’ வந்ததாம். அதில் முதலில் வந்த நிதியில் பெரும் பகுதியை அந்த மாவட்டத்தின் ‘கோல்டு’ பிரமுகர் வேறுவிதமாக பை பாஸ் செய்துவிட்டாராம். தனது சகோதரியின் பேரனுக்காக பெங்களூருவில் மருத்துவக் கல்லூரி கட்டிக் கொண்டிருக்கிறாராம் ‘மிஸ்டர் கோல்டு’. அதன் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக வந்த நிதியில் பெரும் பகுதியை...
அண்​மை​யில் நடந்த முடிந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில் வென்​றுள்​ளது. இந்த வெற்றி காங்​கிரஸ் கட்​சி​யின் சொந்த பலத்​தால் கிடைத்​து​விட​வில்​லை. திமுக கூட்​ட​ணி​யால்​தான் சாத்​தி​ய​மானது. நான் எம்​.பி.​யாக இருந்த மயி​லாடு​துறை திமுக கூட்​ட​ணிக்கு எஃகு கோட்​டை​யாக இருந்​துள்​ளது. காரணம் மயி​லாடு​துறை மக்​கள​வைத் தொகு​திக்கு உட்​பட்ட 6 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் 5 இடங்​களை திமுக கூட்​டணி கட்​சிகள் வென்​றுள்​ளன. இரண்டு இடங்​கள் திமுக​வுக்​கும்,...