70 ஆண்டுகளாக நிறைவேறாத நந்தன் கால்வாய் திட்டம்: பேரவையில் திமுக – அதிமுக காரசார விவாதம்

0
20

கடந்த 70 ஆண்​டு​களாக நிறைவேறாத நந்தன் கால்​வாய் திட்​டம் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் திமுக – அதி​முக இடையே நேற்று கார​சார விவாதம் நடை​பெற்றது. இத்​திட்​டம் தவெக ஆட்​சி​யில் நிறைவேறும் என்று பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் நம்​பிக்கை தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று நடை​பெற்ற பொதுப்​பணி மற்​றும் மனிதவள மேம்​பாட்​டுத்​துறை மீதான விவாதம்:

சிவக்​கு​மார் (பாமக): விக்​கிர​வாண்டி தொகு​தி​யில் 27 கிராமங்​களின் கூட்டுக் குடிநீர் திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டும். விக்​கிர​வாண்டி எம்​எல்​ஏ​வாக கோவிந்​த​சாமி இருந்​த​போது, 1952-ம் ஆண்டு நந்​தன் கால்​வாய் திட்​டத்தை கொண்டு வந்​தார்.

இது​வரை இந்த திட்​டம் குறித்து பேசாத அரசி​யல் தலை​வர்​களே இல்​லை. ஆனால், இன்​னும் அந்த திட்​டம் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா: நீர்​வளத்​துறை மானியக் கோரிக்கை விவாதம் நாளை (இன்​று) நடக்​கிறது. அந்த துறை அமைச்​சரிடம் கேட்க வேண்​டிய கேள்வி​களை என்​னிடம் கேட்​கிறீர்​கள். பொதுப்​பணி, நெடுஞ்​சாலை குறித்து கேட்​டீர்​கள் என்​றால், என்​னுடைய விளக்க உரைக்கு எளி​தாக இருக்​கும்.

எம்​.ஆர்​.கே பன்​னீர்​செல்​வம் (தி​முக): திமுக ஆட்​சி​யில், நந்​தன் கால்​வாய் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று கடந்த ஆண்டு அறி​வித்​து, அதற்​கான நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டது.

சி.​வி.சண்​முகம் (அதி​முக): நந்​தன் கால்​வாய் திட்​டத்தை செயல்​படுத்த கடந்த 70 ஆண்​டு​களாக யாருடைய ஆட்​சி​யிலும் முனைப்பு காட்​ட​வில்​லை.ஆனால், முதல்​வ​ராக ஜெயலலிதா இருந்​த​போது, நான் அமைச்​ச​ராக இருந்​தேன். 8 ஆண்​டு​களுக்கு முன்​பு, முதல்​முறை​யாக நந்​தன் கால்​வாயை தூர்​வாரு​வதற்கு நிதி ஒதுக்​கப்​பட்​டு, தூர்​வாரப்​பட்​டது.

திமுக உறுப்​பினர் நிதி ஒதுக்​கிய​தாக சொல்​கிறார். எப்​படி பல திட்​டங்​களுக்கு நிதி ஒதுக்​கினீர்​களோ அப்​படித்​தான் இது​வும். இது​வரை எந்த திட்​ட​மும் அங்கு நடை​பெற​வில்​லை.

எ.வ.வேலு (தி​முக): நந்​தன் கால்​வாய் திட்​டம் நீண்ட நெடிய கால​மாக கேட்​டுக்​கொள்​ளப்​பட்ட ஒரு திட்​டம். அந்த கால்​வாய் அதி​முக ஆட்​சி​யில் தூர்​வார ஏற்​பாடு செய்​யப்​பட்​டதை மறுக்​க​வில்​லை. அந்த திட்​டத்​தின் நோக்​கம் என்​பது, சாத்​தனூரின் உபரிநீர், திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் ஏறத்​தாழ 11 ஏரி​களில் நிரப்​பி, அங்கு விவ​சா​யம் பார்க்​கப்​பட்​டு, அதற்​குப் பிறகு விழுப்​புரம் மாவட்​டத்தை வந்து சேர்​வது​தான்.

ஆனால், அது செயல்​படுத்​தப்​பட​வில்​லை. விக்​கிர​வாண்டி இடைத்​தேர்​தலில் திமுக வாக்​குறுதி கொடுத்​தது. இதற்கான நில எடுப்​புக்​காக நிதி ஒதுக்கி அரசாணை வெளி​யிடப்​பட்​டது.

சிவக்​கு​மார் (பாமக): இந்த விவ​காரத்​தில் நான் யாரை​யும் குறை சொல்​ல​வில்​லை.

பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர்: இவ்​வளவு ஆண்​டு​களாக செயல்​படுத்​தப்​ப​டா​மல் இருக்​கும் நந்​தன் கால்​வாய் திட்​டம், தவெக ஆட்​சி​யில்​தான் நிறைவேறப் போகிறது என்ற அறி​விப்பை நான் நிச்ச​யம் எதிர்​பார்க்​கிறேன். இவ்​வாறு விவாதம் நடந்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here