சென்னையில் தனியார் நிறுவனம் தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரி சோதனை

0
21

வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து சென்னை​யில் தனி​யார் நிறு​வனம் தொடர்​புடைய 5 இடங்​களில் வருமான வரித்​துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடுபட்டனர்.

சென்னை ஆழ்​வார்​பேட்டை டிடிகே சாலை​யில் தனி​யாருக்கு சொந்​த​மான கணிணி தொழில்​நுட்ப நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கணிணி உதிரி பாகங்​கள் விற்​பனை மற்​றும் தொழில்​நுட்​பச் சேவை​களை வழங்கி வரும் இந்த நிறு​வனம், வெளி​நாட்டு நிறு​வனங்​கள் மற்​றும் இந்​தி​யா​வின் பல்​வேறு சிறிய நிறு​வனங்​களு​டன் நிதிப் பரி​மாற்​றங்​களை மேற்​கொண்டு வரு​கிறது.

இந்த நிதிப் பரி​மாற்​றங்​களில் முறை​கேடு​கள் நடந்​திருப்​ப​தாக​வும், வரு​வாயை முறை​யாகக் கணக்​கில் காட்​டா​மல் வரி ஏய்ப்பு செய்​திருப்​ப​தாக​வும் வரு​மான வரித்​துறைக்கு ரகசி​யப் புகார்​கள் வந்​தன.

இந்​தப் புகார்​களைத் தொடர்ந்​து, வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் அந்த நிறு​வனத்​தின் நிதி​நிலை அறிக்​கைகளைக் கண்​காணித்து வந்​தனர்.

அதில் வரி ஏய்ப்பு நடந்​ததற்​கான முதற்​கட்ட ஆதா​ரங்​கள் கிடைத்​ததையடுத்​து, சென்னை மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் அந்​நிறு​வனத்​துக்​குத் தொடர்​புடைய 5 இடங்​களில் நேற்று ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தப்​பட்​டது.

குறிப்​பாக, ஆழ்​வார்​பேட்​டை, எர்​ணாவூர், விரு​கம்​பாக்​கம், ராஜமங்​கலம் உள்​ளிட்ட இடங்​களில் இந்​தச் சோதனை​கள் நடை​பெற்​றன. துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் அதி​காரி​கள் இந்த நடவடிக்​கையை மேற்​கொண்​டனர்.

முக்​கி​யத் தரவு​கள் ஆய்வு

சோதனை​யின் போது, நிறு​வனத்​தின் கணினி பதிவு​கள், வங்​கிப் பரி​மாற்ற ஆவணங்​கள் மற்​றும் நிதித் தொடர்​பான முக்​கி​யத் தரவு​களை அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர்.

கணக்​கில் வராத நிதிப் பரி​மாற்​றங்​கள் மற்​றும் வரி செலுத்​தாமல் மறைக்​கப்​பட்ட வரு​வாய் குறித்த விவரங்​களைச் சேகரிப்​ப​தில் அதி​காரி​கள் தீவிரம் காட்​டினர்.

சோதனை​யின் முடி​வில் பறி​முதல் செய்​யப்​பட்ட ஆவணங்​கள், ரொக்​கப் பணம் மற்​றும் இதர சொத்​துக்​கள் குறித்த முழு​மை​யான விவரங்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும் என்று வரு​மான வரித்​துறை அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here