இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் ‘இந்தியா தர்ம சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழரான சுபாஷ்கரன் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல. இந்தியாவில் தொடர்ந்து தங்க உங்களுக்கு...
மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாதவரம் ஜி.என்.டி சாலை மற்றும் சந்திரபிரபு காலனி சந்திப்பில் 900 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி, 23-ம் தேதி இரவு 10 மணி முதல் 24-ம் தேதி இரவு...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா வனப் பகுதிகளில் மழை தொடர்வதால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது....
நீட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பழனிசாமி, ராமதாஸ் கோரிக்கை
admin - 0
நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பழனிசாமி: சேலம் சூரமங்கலம் அருகே ஒரு மாணவர், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டது...
ஆயுதங்களுடன் ஊடுருவினாலோ, கொள்ளையில் ஈடுபட்டு தப்பினாலோ குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்வது எப்படி என சென்னையில் போலீஸார், முதன்முறையாக கொள்ளை தடுப்பு ஒத்திகையில் நேற்று ஈடுபட்டனர்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால், குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் இரு தினங்களுக்கு...
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: தமிழக அரசுக்கு ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்
admin - 0
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலம் உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு நடத்தி வருகிறது. ஆனால், இன்று வரையும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறும் திமுக...
விழுப்புரத்துக்குள் நுழைய எ.வ.வேலுக்கு கேட் போட்ட பொன்முடி: 8-வது மண்டல பொறுப்பாளராக எம்.ஆர்.கே வந்த பின்னணி
admin - 0
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த புகைச்சலை அடக்க, எட்டாவது மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
1989-ல் திக இறக்குமதியாக திடீர் வேட்பாளராக பேராசிரியர் பொன்முடியை விழுப்புரத்தில் களமிறக்கியது திமுக தலைமை. அந்தத் தேர்தலில் வென்ற அவருக்கு அமைச்சரவையிலும் முக்கிய இடமளித்தார் கருணாநிதி. அது...
மயிலாடுதுறைக்கு சொல்லாத விதியை கும்பகோணத்துக்கு மட்டும் சொல்வது ஏன்? – தனி மாவட்ட பிரச்சினை
admin - 0
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 27 ஆண்டு கால கோரிக்கை அரசியல் சதிராட்டத்தால் காலாவதியாகிக் கொண்டே வருவதாக பொதுநல அமைப்புகள் புலம்பித் தீர்க்கின்றன.
2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, “திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிந்துள்ள நிலையிலும் அதற்கான சிறு துரும்பும் நகரவில்லை. மாறாக, கும்பகோணத்தை...
சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? – உச்ச நீதிமன்றம் கேள்வி
admin - 0
தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் அண்ணல் அம்பேத்கர்...
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை 3-வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர்.
பாமகவில் உட்கட்சி மோதல் நீடித்து வரும் நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் 3-வது நாளாக நிறுவனர் ராமதாஸ் நேற்று நடத்தினார். இதில் வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், பாமக தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றும் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராமதாஸ் செய்தியாளர்களிடம்...









