தமிழகத்தில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் 2020 ஜனவரியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால் 4.47 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 4.41 கோடிக்கும் அதிகமானோர் தொற்றில்...
‘‘இசை என்பது இறைவனை எளிதாக அடைவதற்கு உள்ள ஒரு மார்க்கம் ’’ என சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பக்தி விருந்து நிகழ்ச்சியில், ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கூறினார்.
கற்பக சுவாசாலயா அறக்கட்டளையின் நிறுவனர் கற்பகதாசன் டாக்டர் ஸ்ரீதரன், டாக்டர் பாலாஜி இணைந்து வழங்கிய முத்தமிழ் பக்தி விருந்து, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய டாக்டர் ஸ்ரீதரன், ‘‘நான் ஆஸ்துமா அலர்ஜி...
பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் மீண்டும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என...
வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது,...
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோடை காலத்தின் முக்கியமான அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) காலம் தற்போது நிலவுகிறது. மே மாதத்தில் தொடக்கம் முதல் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதன்பிறகு, வெப்பச்சலனம் காரணமாக, சில இடங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தாலும் பெரிய அளவில்...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
admin - 0
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மே 7-ம் தேதி தொடங்கப்பட்டது. திங்கட்கிழமை (மே 19) மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு...
போலீஸார் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வந்தார்.
வந்தவர் திடீரென மறைத்து வைத்திருந்த ‘பிளாஸ்க்கை’ திறந்து அதில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவரை...
காவல், சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
admin - 0
காவல், சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் அமைதியைப் பேணிப்காத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்புப் பணிகளுக்காக...
டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை...
மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை விருகம்பாக்கம், தி.நகர் உள்பட 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜகவை பார்த்து சூரியன் அச்சப்படும்...










