தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.14) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....
பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் கட்சியை வழிநடுத்துவது யார் என்ற அதிகார மோதல் போக்கால் யார் பின்னால் செல்வது என தெரியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த மோதல் போக்கு ஏதோ புதிதாக இப்போது ஏற்பட்டது அல்ல. கட்சியின் இளைஞர் அணி தலைவரில் இருந்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த போதே, தந்தைக்கும், மகனுக்கும்...
தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிநாடுகளின் செயல்பாடுகள் போன்றவற்றால் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வருகிறது. இதைக் கருத்திக் கொண்டு, தக்க வியூகங்கள் வகுத்து முப்படை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 45 வார பயிற்சியை நிறைவு செய்த 478 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாகலாந்து மிக குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் நிறைந்த மாநிலமாகவும் உள்ளது. இந்த மாநிலத்தில் முந்தைய காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் இருந்தனர். மோடி பிரதமரான பிறகு போராளிகளுக்கும், அரசுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி ஆயுதத்தை ஏந்த மாட்டோம் என்று போராளிகள் உறுதியளித்தனர். அதை...
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
admin - 0
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்படும் இடமாறுதல்களை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராகப் பணிபுரிந்து வருபவர் ஆர்.சிவகுமார். இவர் 1995 முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கான ஊதியம் தரப்படுவதில்லை. ணிக்குரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதில் சிவகுமாருக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை உச்ச...
கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுகன்யா கடந்தஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண் காவலர்கள், உயரதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
தொடர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களில் சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீது...
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பாரதிய பாஷா பரிஷத் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது ரூ..1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. கொல்கத்தாவில் மே மாதம் 1-ம்...
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக தளங்களில் ஏப்.30 வரை விழிப்புணர்வு போட்டிகள்
admin - 0
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்.30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் எக்ஸ், இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஏப்.30 வரை பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களை...
கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது...
மதுபான ஆலை நிறுவனத்திடம் இருந்து அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
சென்னையில் அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில்...










