கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமலாக்கத் துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்தால் கட்டாயம் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனால், அமலாக்கத் துறை சோதனைக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, உண்மை...
ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு, தான் திருப்பூரை தலைமையகமாக கொண்டு நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி குளத்துப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு, பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வருபவர் ஆன்மிக பேச்சாளா் மகாவிஷ்ணு. பல்வேறு நாடுகளில் இவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு கிளைகள் உள்ளன.
இவர் சென்னை அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும், முன்ஜென்மம் குறித்தும் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மகாவிஷ்ணு பிணையில் வந்த...
அமலாக்க துறை சோதனை நடத்தினால் டெல்லிக்கு படையெடுக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சீமான் விமர்சனம்
admin - 0
அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், டெல்லிக்கு படையெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவையொட்டி, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக, அதிமுகவின் கொள்கை ஒன்றுதான். அதேபோல, காங்கிரஸ், பாஜகவின் கொள்கையும் ஒன்றுதான். இவர்களிடம் கொடிகள்தான் வெவ்வேறாக உள்ளன....
பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-வது சதயவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு நேற்று பாஜக சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்து தலைவர்களையும் போற்றும் கட்சியாக பாஜக உள்ளது. 75-வது...
ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் நகைக்கடன் பெறுவதற்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அடகு வைக்கப்படும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான சான்றை தாக்கல் செய்ய...
கல்வி நிதி ரூ.2,152 கோடியை 6% வட்டியுடன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
admin - 0
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டம் என்பது பாலர்...
அடையாறு சீரமைப்பு பணிக்காக அரசின் மறுகுடியமர்வு திட்டத்துக்கு ஒத்துழைக்க நகராட்சி நிர்வாகத்துறை வேண்டுகோள்
admin - 0
அடையாறு சீரமைப்பு பணிக்கான அரசின் மறுகுடியமர்வு திட்டத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையாறு நதியை சீரமைக்க ரூ.1500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.
இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத்...
பெரம்பலூர் அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் சித்த மருத்துவரின் கணவர், மகள், தந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்நத 3 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரங்குடி அருகே உள்ள தெற்கு கிரிவளை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன் மகன் பாலபிரபு (28). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவுரி(27). சித்த மருத்துவர். இவர்களுக்கு 2 வயதில் மகள்...
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் திடீரென புகை வந்ததால், பயணிகள் பதட்டமடைந்தனர்.
இதற்கிடையில், அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பின்னால் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரயில்வே கோட்டத்தில் கடற்கரை - தாம்பரம் வழித்தடம் முக்கியமான உள்ளது. இந்த வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். குறிப்பாக, காலை,...
சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மாதம் 28-ம் தேதி உச்சிமேடு மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (63) கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதோடு, அவர்கள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது.
இதே பாணியில் திருப்பூரிலும் கொலை, கொள்ளை...










