Google search engine
 “திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணியை குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை நிர்வாகியின் மகளின் திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 14-ம் தேதி திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில், அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுகிற...
மாநிலங்களுக்கு நிதியை வழங்கினால் மட்டும் போதாது, அந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மதுரையைச் சேர்ந்த் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள், சாலையோரங்களில் முதியோரை உறவினர்கள் தனியே விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. முதியோரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வந்து, அங்கேயே...
திமுக கூட்டணி சலசலத்துப் போயிருக்கிறது. வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் திருமாவளவனின் பேச்சு உள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நேற்று வெளியிட்ட மத்திய அமைச்சர் முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கிறார். அவர்...
புனேயில் இருந்து 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புனேயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 178 பயணிகளுடன் நேற்று அதிகாலை சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தது. விமானம் அதிகாலை 1.10 மணியளவில், சென்னையில் தரையிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து தாழ்வாக பறந்தது. கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட்...
தமிழகத்தின் அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்ததினத்தையொட்டி, அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்தந்தப் பகுதி சுதந்திரப் போராட்ட வீரர்களின் சரித்திரத்தை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் குழந்தைகளுக்கு...
எனது தொகுதிக்கு வந்த பாலப் பணியை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றிய அமைச்சர் கே.என்.நேரு மீது எனக்கு வருத்தம் என்றும், அடுத்தவர்கள் சாப்பாடை எடுத்து சாப்பிடுவது தவறு என்றும் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், எம்.பி.க்கள் திருச்சி துரை.வைகோ, கரூர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், எம்எல்ஏக்கள் லால்குடி சவுந்தரபாண்டியன்,...
வாக்​குப்​ப​திவு இயந்​திரத்தை பாஜக தவறாக பயன்​படுத்​தி​னாலும், தமிழகத்​தில் ஒரு இடத்​தில் கூட அவர்​களால் வெற்​றி​பெற முடி​யாது என விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் எம்​.பி தெரி​வித்​தார். பெரம்​பலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:தமிழகத்​தில் அதி​முக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை ஒருங்​கிணைத்து வலு​வான கூட்​டணி அமைக்க வேண்​டும் எனும் அமித்​ஷா​வின் எண்​ணம் இன்​னும் கைகூட​வில்​லை. ஏற்​கெனவே அவர்​கள் கூட்​ட​ணி​யில் இருந்த பாமக, தேமு​திக கட்​சிகள்​கூட கூட்​ட​ணி​யில் இணைய தயக்​கம் காட்டி வரு​கின்​றன....
மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தில் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் அடுக்குமாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட கட்டிடத்துக்கு உள்ளே மெட்ரோ ரயில் சென்று வெளியே வரும் வகையில், 9 அடுக்குமாடி கட்டிடத்தின் மாதிரி புகைப்படங்களை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடம் ஒன்றாகும்....
ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சேர்த்துள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஐ.சி.சி.யின் பெருமைமிகு 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு என் வாழ்த்துக்கள். ஒருநாள்...
 நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன் உள்ளிட்ட 4 பேரும், அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுகவினரின் மனுக்களுக்கு எதிரான வா.புகழேந்தியி்ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், 7 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா,...