பிஹாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகை...
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர் மற்றும் 2 சீனியர் மாணவர்களால் 24 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 3 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி சவுமன் சென் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரமாண...
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் ஸ்வரண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளர் பெயர் உட்பட முழு விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்கள் 5,000 பேர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் முசாபர்நகரின் ‘பண்டிட்ஜி வைஷ்னோவ்...
இமாச்சலபிரதேசம், மண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 10 மேகவெடிப்புகள், 3 திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக், கர்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் மேலும் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை தேடும் பணி நடைபெறுகிறது. இந்தப் பேரிடரில் 162 கால்நடைகள் இறந்தன. மேலும்...
கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் சோன்பிரயாக் அருகேயுள்ள முங்காட்டியா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேதார்நாத் யாத்திரையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கவுரிகுந்த் பகுதியிலிருந்து திரும்பிய சில பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கினர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு...
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
குடியரசுக்கு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆதரவுடன் வெளிவந்துள்ள இந்த மசோதா ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது...
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
admin - 0
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக்...
பாஜக தேசியத் தலைவராக பெண் ஆளுமை; ஒப்புதல் அளித்த ஆர்எஸ்எஸ்: ரேஸில் முந்தும் நிர்மலா சீதாராமன்!
admin - 0
பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திர பாஜகவின் முன்னாள் தலைவர் புரந்தரேஸ்வரி ஆகியோர் அந்தப் போட்டியில் உள்ளனர்.
பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின்...
ஜாம்பியாவில் நிலத்துக்கு அடியில் இருக்கும் தாமிரம், கோபால்ட் தாது படிமங்களை ஆராய புவியியலாளர் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: எரிசக்தி மாற்றத்துக்கு அவசியமான முக்கிய கனிமங்களை பெறுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாமிரம், கோபால்ட் தாது ஆய்வுக்காக இந்தியாவுக்கு ஜாம்பியா அரசு இந்த ஆண்டு 9,000 சதுர கி.மீ. (3,475 சதுர மைல்) நிலம் ஒதுக்க ஒப்புக்கொண்டது.
மின்சார வாகனங்கள்...
கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்தவர் பிலால் அகமது டெலி (21). பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ள அவர், இணையதள வடிவமைப்பு தொடர்பாக ஓராண்டு டிப்ளமோ படிப்பையும் நிறைவு செய்துள்ளார். இதன்பிறகு துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி உள்ளார்.
தற்போது குஜராத்தின் சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிலால் பணியாற்றி வருகிறார். அவரது மாத ஊதியம் ரூ.1.25 லட்சம் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஐஐடி...










