ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக். காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கக் கோரும் இவரது அமைப்பு தீவிரவாத செயலில் ஈடுபட்டு வந்தது. தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாலிக் டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.
காஷ்மீர் முன்னாள்...
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங் கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் பல இந்து கோயில்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. அடக்குமுறைகள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்கான் கோயில் மதகுருவான சின்மய் கிருஷ்ண தாஸை அந்நாட்டு போலீஸார் டாக்கா விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களின் மதகுருவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் அமைப்பு கோரியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில துணை...
ரஷ்யாவில் ரயில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய அந்த நாடு ஆர்வம் காட்டி வருகிறது. அத்துடன் இந்தியாவிலேயே ரஷ்யாவுக்கு தேவையான ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான உற்பத்தி மையத்தை தொடங்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் ரஷ்யாவின் மிகப்பெரிய ரயில் நிறுவனமான டிஎம்எச், இந்திய ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ரஷ்யாவின் டிஎம்எச் நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் படுக்கை வசதியுடன் கொண்ட வந்தே பாரத்...
ஹைதராபாத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தெலங்கானா மாநிலம், சித்தி பேட்டை மாவட்டத்தில் உள்ள கரகபட்லா எனும் ஊரில் போலி மருந்து தொழிற்சாலை இயங்குவதாக தெலங்கானா மாநில மருந்து கட்டுப்பாடு ஆணையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்குச் சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது, மல்காஜ்கிரி மாவட்டம், செர்லபல்லி பகுதியில் உள்ள மற்றொரு மருந்து தொழிற்சாலையின் பெயர்களால் தயாரிக்கப்படும் போலி நோய்...
சைபர் கிரைம் கும்பலின் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி மும்பை ஐஐடி மாணவர் ஒருவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. எனினும் மும்பை பவாய் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மும்பை ஐஐடியின் 25 வயது மாணவர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்து தன்னை டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்)...
சமூக ஊடக தளங்களில் ஆபாச காட்சிப் பதிவுகளை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்குவது அவசியம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சமூக ஊடக தளங்களில் சட்டவிரோதமான முறையில் பாலியல் மற்றும் பாலியல் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்புவதை தடுக்க தற்போதுள்ள வழிமுறைகள் குறித்து மக்களவையில் பாஜக எம்.பி. அருண் கோவில் நேற்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர், “சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள்...
இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை சப்ளை செய்து வரும் நாடாக தற்போது ரஷ்யா உருவாகியுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற எப்ஐபிஐ ஆயில் அன்ட் கேஸ் விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. 2022 பிப்ரவரி...
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது.
இந்திய கடற்படையை விரிவாக்கம் செய்வதற்காக, ‘திட்டம் 66’ என்ற பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது. இதன்படி 50 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுபோல ‘திட்டம் 77’ என்ற பெயரில் அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வங்கவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது....
சம்பல் பகுதியில் ஆத்திரமூட்டும் வகையில் சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏ மகன் சர்ச்சை பேச்சு: 800 பேர் மீது வழக்குப் பதிவு
admin - 0
சம்பல் பகுதியில் நடந்த வன்முறை வழக்கில், ஆத்திரமூட்டும் வகையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., எம்எல்ஏவின் மகன் ஆகியோர் பேசியுள்ளனர் என்று போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 700 முதல் 800 நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) சென்றபோது...
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் கேட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை அதிவேக ரயில்களை தயாரித்து வருகிறது. இந்த...









