மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா, பஞ்சாப் அரசுகள் வாதம்
admin - 0
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை காலவரையின்றி ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா, கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்டன. மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதில் கர்நாடக அரசு தரப்பில்...
நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அர்விந்த் ஹைதராபாத்தில் கீதா ஆர்ட்ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவற்றின் அலுவலக கட்டிடம் ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண் 45-ல் அமைந்துள்ளது.
இந்த கட்டிடத்துக்கு 4 அடுக்குகள் மட்டுமே கட்ட ஹைதராபாத் மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடந்த 2023-ல் அனுமதி பெறாமலேயே 5-வது மாடி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அல்லு அர்விந்துக்கு ஹைதராபாத்...
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை வீடுகள் ஆகும். 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலம் உள்வாங்கி வருவதால் கிராம மக்கள்...
வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு
admin - 0
இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு, மீட்பு பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
டெல்லியில் நேற்று காலை குடியரசு துணைத்...
கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு
admin - 0
கேரள மாநிலத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில் ஆஎஸ்எஸ் கொடியுடன் ஆபரே ஷன் சிந்தூர் பெயரில் மலர் கம்பளம் உருவாக்கிய அக்கட்சி தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இந்த பகுதியில் கம்யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்கெனவே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர்களிடம் இந்த பதற்றம் நிறைந்த பகுதியில் கொடியோ அல்லது வேறு ஏதும் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மலர்...
பாலியல் வன்கொடுமையை மறைக்க ஒடிசா மதரஸாவில் படிக்கும் மாணவன் கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது
admin - 0
ஒடிசா மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் சிறுவனை, அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள் 5 பேர் கடந்த 6 மாதமாக தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்போவதாக சிறுவன் மிரட்டியுள்ளான். இதனால் அந்த சிறுவனை கொலை செய்ய மதரஸா மாண வர்கள் 5 பேர் முயற்சித்தனர். சில நாட்களுக்கு முன் அந்த சிறுவனை தண்ணீர் தொட்டியில் தள்ளி...
உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது.
உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை...
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த ராமச்சந்திர ராம், ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்தில் பெய்த கனமழையால் இவர்கள் தங்கியிருந்த குடிசை சேதமடைந்துள்ளது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள். ஒரு மாதம் முன்பு 5-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதிலிருந்து தேவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால், தங்களுடைய ஒருமாத...
பாஜக எம்பி.க்களின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் பாஜகவின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இதில், ஜிஎஸ்டியில்...
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பெரிய கன்டெய்னர் லாரிகளில் பசுக்கள் ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் நவடா கிராமத்துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் பசுக்களை மடக்கி...










