தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியதில் முக்கிய சாலைகள் உட்பட பல இடங்களில் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விஜயவாடா -...
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு
admin - 0
நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றது கவனம் பெற்றது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆளும் தேசிய ஜனநாயகக்...
சிக்கிமில் உள்ள மேல் ரிம்பி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்தாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது சேறும், பாறைகளும் அவர்களின் வீட்டைத் தாக்கின. அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நான்காவது நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார்.
ஹியூம் நதியின் மீது தற்காலிக மரப் பாலம் அமைத்து காயமடைந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்ட...
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிஜப்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை), சத்தீஸ்கரின் கரியாபந்தில்...
பிஹாரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் அவமதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் அவர் செல்லவிருந்த சாலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உ.பி.யின் ரேபரேலி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று தனது தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் ரேபரேலி செல்லவிருந்த சாலையில் உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப்...
கர்நாடக மாநிலம் கார்வார்- அங்கோலா சட்டபேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்சம் டன் இரும்புத் தாது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து அபராதம் விதித்தது.
இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்கத்துறை கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், சதீஷ் கிருஷ்ணா வருமான மற்றும்...
நாடு சுந்திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் சோவியத் ஒன்றியத்தின் தூதராக இருந்த தமிழரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் இரண்டாவது முறையாக இப்பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலைவர் பதவியையும் அடைந்தார்.
1962-ல் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்....
நகரங்களில் கட்டிடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களை கொண்டு கணக்கிட்டு ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் இணையதளம் ஒன்று ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய நகரங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. நகர்ப்புற எல்லை பல திசைகளில் விரிவடைந்து, தற்போது நகர்ப்புற வளர்ச்சியில் நாட்டில் முதல் இடத்தை...
நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த 240 பேரை அங்கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் அழைத்துவர ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேபாளத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களில் சிலர் அமராவதியில் உள்ள ஆந்திர அதிகாரிகளை தொடர்புகொண்டு தங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கை...
நாட்டின் 2-வது பெரிய அரசியலமைப்பு பதவியாக குடியரசுத் துணைத் தலைவர் பதவி உள்ளது. அவருக்கு ஊதியம் என்ற பெயரில் நிலையான தொகை அளிக்கப்படா விட்டாலும், சலுகைகள் உள்ளிட்டவற்றின் மூலம் ரூ.4 லட்சம் அளவுக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர், குடியரசுத் தலைவர் (பொறுப்பு) பதவியில் இருந்தால் அவருக்கு குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும்.
மேலும், குடியரசு துணைத் தலைவருக்கு அரசு சார்பில் தங்குமிட வசதி...










