அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டார்.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த 3 நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ...
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தை இணைக்கும் வகையில் சிலிகுரி பூமிக்கடியில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பாதை இந்தியாவின் பிரதான பகுதியையும் வட கிழக்கு மாநிலங்களையும் இணைக்கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலைவுடைய மிக குறுகிய பாதை ஆகும். இதன் இரு புறமும் நேபாள, வங்கதேச எல்லைகள் அமைந்துள்ளன.
வடபகுதியில்...
கடந்த ஆண்டில் முதன்முறையாக நேபாளத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிருக்கான டி-20 உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணியினர், பயிற்சியாளர் வெங்கடேஷப்பா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ எம்.எல். ராஜு ஆகியோருடன் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோயிலின் வெளியே இந்திய அணியின் கேப்டன் தீபிகா கூறும்போது, “முதன் முறையாக நடந்த பார்வையற்றோருக்கான போட்டியில் உலக...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் விபி-ஜி- ராம் ஜி திட்டத்தின் பெயரை குறிப்பிடவில்லை. இத்திட்டத்துக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) பெயர் விபி- ஜி ராம் ஜி என்று சமீபத்தில் மாற்றப்பட்டது. மேலும், ஏற்கெனவே இருந்த திட்டத்துக்கு மத்திய அரசு 100% நிதி அளித்தது. மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி அதற்கான நிதியை மத்திய அரசு 60 %...
ஒரு மலையாளி என்ற முறையில் மத்திய பட்ஜெட்டில் திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை: சசி தரூர் கருத்து
admin - 0
மத்திய பட்ஜெட் 2026-27-ல் ஒரு மலையாளி என்ற முறையில் தனக்கு திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறினார்.
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆயுர்வேதத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட கேரளாவுக்கு ஓர் ஆயுர்வேத நிறுவனம் தேவை. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தொடர்பான அறிவிப்புக்காக காத்திருந்தோம். ஆனால் நாங்கள் கேரளாவின் பெயரை கேட்கவில்லை.
மீனவர்கள் மற்றும்...
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் வருந்தத்தக்க பட்ஜெட் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பட்ஜெட் சாதாரண மக்களை புறக்கணித்துள்ளது. பட்ஜெட்டின் விளைவால் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் ஏன் திறக்கப்பட்டன? என்ற கேள்வியை விட பங்குகள் மேலும் எவ்வளவு வீழ்ச்சி அடையும் என்ற கேள்விதான் உண்மையில் எழுந்தது.
நடுத்தர வர்க்கத்தினர் ஏமாற்றப்பட்டுள்ளனர்....
2026-27ம் நிதியாண்டில் தலைமை தேர்தல் ஆணையத்துக்காக ரூ.382.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-26-ல் ஒதுக்கப்பட்டதை விட 25% அதிகம். இதில் ரூ.367.69 கோடி நிதி, தேர்தல் தொடர்பான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள நிதி, நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் செல வினங்களுக்காக செலவிடப்படும். மேலும், வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் 2026–27- க்கான மத்திய பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்லியில் இன்று மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். இதற்காக, நேற்று கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட் திசையற்றது, தொலைநோக்குப் பார்வையற்றது, செயலற்றது. இது பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும்...
‘‘அமைதி, நீதி, சுதந்திரத்துக்காக அதிகபட்ச தியாகங்கள் செய்த மகாத்மா காந்தி, இந்தியாவின் அழியாத ஆன்மா’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதி,...
மறைந்த அஜித் பவாரின் அஸ்தி பாராமதியில் உள்ள நீரா மற்றும் கர்ஷா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் புனே மாவட்டம் பாராமதியில் உள்ள வித்ய பிரதிஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.
இங்கு அஜித் பவாரின் மகன்கள் பர்த் மற்றும் ஜே ஆகியோர் தங்களது தந்தையின் அஸ்தியை நேற்று சேகரித்தனர்....
