பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும் பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உளவு நடவடிக்கைகளில் மிகத் திறமையானவராக கருதப்படும் அஜித் தோவல், 1968-ம்ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரி. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்பு இவர் கடந்த மே 2014-ல் மோடி முதன்முறையாக பதவியேற்றபோது இப்பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது முதல்...
டெல்லியில் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் நிறுவனம் சார்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பெற்ற ரூ.69 கோடி கடனுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார். இவர் கடன் வாங்கிய நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த தவறியதையடுத்து, உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் வங்கி அவருக்கு எதிராக லுக் - அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது. இதை எதிர்த்து அந்த இயக்குநர் டெல்லி நீதிமன்றத்தில்...
இந்திய அரசியல் வரலாற்றில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல்வாதிகள் சிலரில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உடனுக்குடன் அமல்படுத்தும் அரசியல் தலைவர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஐ.டி. துறையை முடுக்கி விட்டவர். திருப்பதி அருகே நாராவாரி பல்லி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சந்திரபாபு. கடந்த 1975-ல்காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவசரநிலை காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார். சந்திரபாபுவின் ஆற்றலை கண்டு...
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சாதனைஉச்சத்தை தொட்டது. ஹெரிடேஜ்ஃபுட்ஸ் பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இதனால்,அந்த நிறுவனத்தில் 35.7 சதவீதபங்குகளை...
பிரதமர் மோடி தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் நேற்று தொண்டர்களிடையே பேசும்போது தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதன்முறையாக கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு நேற்று வருகை தந்தார். வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் அவ்விரண்டிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து, அவர் எந்த தொகுதியில் தனது...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கந்தர்பால் மாவட்டம் துல்முல்லா கிராமத்தில் கீர் பவானிஅல்லது ரங்யா தேவி கோயில்உள்ளது. தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கீர் பவானியை காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அங்கு வரும் 14-ம்தேதி வருடாந்திர திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் உட்பட 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்...
ஆந்திராவின் தலைநகரம் அமராவதிதான் என, ஆந்திர மாநிலமுதல்வராக இன்று பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம்தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்....
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மட்டுமே இரண்டு தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நேற்று இரவு ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது...
கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின்முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு அரசு குடியிருப்பு இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தார். இதனால் பாஜகவின் புதிய முதல்வருக்காக அம்மாநில அதிகாரிகள் அரசு குடியிருப்பை தேடி வருகின்றனர். கடந்த 2000-ம் ஆண்டில் ஒடிசா முதல்வரானார் நவீன் பட்நாயக். அப்போது அவர் அரசு குடியிருப்பிற்கு மாறவில்லை. அவர், தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக், புவனேஸ்வரில் கட்டிய புதிய பங்களாவில் குடியிருந்தார். ‘நவீன்நிவாஸ்’ எனும்...
சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா...