ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கில் இவர் கடந்த 2012-ல் கைது செய்யப்பட்டு, 16 மாதங்கள் சிறையில் இருந்தார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் 2014 தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் இவரது கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் ஆந்திர முதல்வராக பதவியேற்றார்.
அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெகன்...
121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன் மீது கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனப்படும் சூரஜ் பால் ஜாட்டவ் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து...
நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரின் பெயர் அமன் சிங் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் கைது செய்துள்ளனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஜார்க்கண்ட்...
மக்களவையில் ராகுல் கடும் வாக்குவாதம்: சர்ச்சையான பேச்சுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா கண்டனம்
admin - 0
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், பாஜக தலைவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுலின் சர்ச்சைபேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். அவையில் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
மக்களவை நேற்று காலை கூடியதும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்குமக்களவை தலைவர் ஓம் பிர்லாவாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை...
மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளராக இருந்த நிதின் கரீர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, முதல் பெண் தலைமைச்செயலாளராக சுஜாதா சவுனிக் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மந்த்ராலயாவில் (தலைமைச் செயலகம்) நடைபெற்ற நிகழ்ச்சியில், நிதின் கரீர் தனது பொறுப்பைசுஜாதாவிடம் ஒப்படைத்தார்.1987-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான இவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
சுஜாதா சவுனிக் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு மாநில உள் துறையின்...
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள் கைகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கார்கே கூறியதற்கு மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். கார்கேவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவைக்குறிப்பில் இருந்துநீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்டஅவைத் தலைவர்...
அவதூறு வழக்கில் சமூக சேவகர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை: டெல்லி ஆளுநருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக சேவகர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர், வி.கே.சக்சேனாவுக்கு எதிராக பேசினார். இதையடுத்து, மேதா பட்கருக்கு எதிராக வி.கே. சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
2001-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அப்போது காதி...
பிஹார் மாநிலம் பாட்னா தீ விபத்தில் தனது தாய் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது அம்பல மாகியுள்ளது.
பிஹார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஏப்ரல் 25-ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு களும் முடிந்தன.
இந்நிலையில் இந்த ஓட்டல்...
மேற்கு வங்கத்தில் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: பாஜக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கண்டனம்
admin - 0
மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் முன்னிலை யில் ஒரு பெண்ணை ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ வேகமாக பகிரப் பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சமூக வலைதளங் களில் ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பொது இடத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்துவிட்டார். அந்த இடத்தில் இருக்கும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும்...
ஆம் ஆத்மி கட்சியின் மதுபான ஊழலால்தான் மக்களவைத் தேர்தலின் போது டெல்லியில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் தத் நேற்று கூறியதாவது: டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் புகார் செய்தபோது, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 18 மாதங்கள் வரை...










