Google search engine
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் (பிஎம்ஏஒய்) முதல் தவணையைப் பெற்றுக் கொண்ட திருமணமான 11 பெண்கள், தங்களது காதலர்களுடன் வீட்டைவிட்டு மாயமான சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. நாடு முழுவதும் பிரதமரின் பிஎம்ஏஒய் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டம் பாஜகஆளும் உத்தர பிரதேச மாநிலத்திலும் பிரபலமாக உள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 2,350 பேர்...
பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது மேற்கு வங்க மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா...
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை (ஜூலை 10) தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. இப் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, முகாமைத்தொடங்கிவைத்தார். பின்னர் அவர்...
குழப்பம் மற்றும் பொய்களை மட்டுமே ராகுல் காந்தி பரப்புகிறார் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அயோத்தியில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம், பாஜக மூத்த தலைவர் அத்வானியால் தொடங்கப்பட்ட ராமர் கோயில் இயக்கத்தை இண்டியா கூட்டணி தோற்கடித் துள்ளது” என்றார். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளரை...
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்களுக்கு சேவை செய்வதற்காக ரூ.20 கோடி மதிப்பில் 4 கவச கார்களை மெர்சிடிஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின்போது அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது மிக முக்கியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 4 கவச மெர்சிடிஸ் கார்களை ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு வாங்க உள்ளது. இதற்காக,...
ஒடிசா மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்வியின் எதிரொலியாக பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பட்நாயக் நேற்று மேலும் கூறியதாவது: பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பர். மாநில அளவில் புதிய...
உ.பி.யில் மசூதிகளில் இடமின்மை காரணமாக முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது சர்ச்சையானது. இதற்கு ஆதரவாக பீம் ஆர்மி எம்.பி. ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத் கூறிய கருத்தைகாங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கண்டித்துள்ளார். ராஜஸ்தான் ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமைகளில் மசூதிகள் நிரம்பி வழிவதால் முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்தி வந்தனர். கரோனா பரவலுக்கு பிறகு ஹரியாணாவின் குருகிராமில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பிறகு உ.பி. மற்றும்...
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மற்ற பகுதிகளில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவி மும்பை மற்றும் ஊரக பகுதிகளான ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை)...
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முடர்கம், சானிகம் ஆகிய கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் இணைந்து கடந்த 6-ம் தேதி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, முடர்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ...
உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சரக்கரை, உப்பு, கொழுப்பு சத்து அளவுகளை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்துக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள பாக்கெட்உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் பல நோய்களுக்கு காரணம் எனவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.அதனால்...