Google search engine
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் நில முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரது மனைவி அந்த நிலத்தை திரும்பஒப்படைப்பதாக கடிதம் எழுதிஉள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தைமைசூரு நகர்ப்புற மேம்பாட்டுகழகம் கையகப்படுத்தியது.இதற்கு மாற்றாக ரூ.56 கோடி மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை வழங்கியது. இந்த நிலத்தின் மதிப்பு, கையகப்படுத்திய நிலத்தின்மதிப்பைவிட அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக சமூகஆர்வலர்கள்...
இமாச்சலப் பிரதேசத்தின் ரோதங் கணவாய் பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற பயிற்சி மைய வீரர்கள் கடந்த 2003-ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது விமானப்படை விமா னம் ஒன்றின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்தனர். அது கடந்த 1968-ம் ஆண்டு விபத்துக்குள்ளான விமானப்படையின்...
திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தியது குறித்து விசாரிக்க ஆந்திர அரசு ஒரு சிறப்பு விசாரணை குழுவினை (எஸ்ஐடி) குண்டூர் டிஐஜி சர்வ ஸ்ரேஷ்ட திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பதிக்கு வந்து விசாரணையை தொடங் கினர். இதில் பல விஷயங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில்கலப்பட நெய் வழக்கை விசாரித்தஉச்ச நீதிமன்றம்,...
ஜன அதிகார சங்கரஷ சங்கத்தின் துணை தலைவர் ஆதர்ஷ் அய்யர் தாக்கல் செய்த மனுவின்பேரில், பெங்களூருவில் மக்கள் பிரதி நிதிகள் மீதான வழக்கை விசாரிக் கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 28- தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து திலக் நகர் போலீஸார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் நிர்மலா...
சமூக வலைதளங்களில் இருந்து கொல்கத்தா பெண் மருத்துவரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனிடையே மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை...
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதான குற்றச்சாட்டில் உண்மை நிலவரம் என்ன என்பதை ஆராய, ஆந்திர அரசு ‘எஸ்ஐடி’ என்னும் சிறப்பு விசாரணைக் குழுவை குண்டூர் ஐஜி சர்வேஷ்ட்ர திரிபாதி தலைமையில் அமைத்துள்ளது. இந்தக் குழுவில், விசாகப்பட் டினம் டிஐஜி கோபிநாத் ஜெட்டி, கடப்பா எஸ்பி. ஹர்ஷவர்தன் ராஜுஉட்பட மொத்தம் 9 பேர் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் 3-வது நாளாகநேற்றும் விசாரணை நடத்தினர்.அப்போது திருமலை...
மத்திய உளவுத்துறை பெங்களூருவில் உள்ள ஜிகனியில் பாகிஸ்தானியர் ஒருவர் குடும்பத்துடன் வசிப்பதாக பெங்களூரு போலீஸாருக்கு தகவல் அளித்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 48வயதான பாகிஸ்தானியர் ஒருவரும், அவரது மனைவி, மாமனார்,மாமியார் ஆகியோர் சிக்கினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், 48 வயதான அந்த நபரின்உண்மையான பெயர் ரஷித் அலிசித்திக் என தெரியவந்தது. பாகிஸ்தானில் காராச்சியை சேர்ந்த இவர்,கடந்த 2013-ம் ஆண்டு வங்கதேசத் தில்...
உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 49 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றுமாநில அதிரடிப்படை யான எஸ்டிஎப் தெரிவித்துள்ளது. உ.பி.யில் கடந்த மார்ச் 2017-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது உ.பி.யில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல், வினாத்தாள் கசிவு,சைபர் குற்றங்கள், நில அபகரிப்புஎன குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாக புகார் நிலவியது. சட்டம்ஒழுங்கும்...
உ.பி.யின் அம்ரோகா தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மெகபூப்அலி. முன்னாள் அமைச்சரான இவர், பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “உ.பி.யில் பாஜக ஆட்சிமுடிவுக்கு வரும். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர் என்பதை நாட்டை எரித்து வருவோர் உணர வேண்டும். மக்களவைத் தேர்தலில் மக்கள்தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2027 சட்டப்பேரவை தேர்தலில் உங்கள் ஆட்சி முடிவுக்கு...
திருப்பதி ஏழுமலையான் கோயில்பிரசாதமான லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா போன்ற இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பலர் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், அயோத்தி ராமர்கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் நேற்று...