தமிழ் கல்வெட்டுப் படிகளை பதிப்பிக்க மத்திய அரசிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் நேரில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது: இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கல்வெட்டுப் பிரிவின் மைசூர் கிளையில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகள் தற்போது சென்னை கிளையில் உள்ளன. பல்லாண்டுகளாக டிஜிட்டல் முறையில் ஆவணமாக்கப்படாமல் உள்ளன. இவற்றை டிஜிட்டலாக்கி, ஆய்வு...
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சட்டப்பேரவையில் (சுவர்ண சவுதா) குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2ஏ பிரிவில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பஞ்சமசாலி லிங்காயத்து பிரிவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலசங்கம பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெயமிருதஞ்ஜெய சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும்...
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில்...
இண்டியா கூட்டணியின் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சு எதிர்க்கட்சிகளிடையே அண்மையில் வலுத்துள்ளது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆதரவளிக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மம்தா பானர்ஜி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ்...
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன் 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தனது மரண விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோரை எக்ஸ் தளத்தில் டேக்...
மேற்கு வங்கத்தில் 40 ரஃபேல் விமானங்கள் உள்ளன; இரண்டை அனுப்பினாலே போதும் என்று வங்கதேசத்துக்கு மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா-வங்கதேச எல்லை அருகே உள்ள பசிர்ஹத் நகரின் ஹஜ்ரதலா...
மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று மண்டியாவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) பெங்களூருவில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள், கன்னட திரையுலகினர், தொழில் துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று காலையில் பெங்களூருவில்...
நொய்டா 77-வது செக்டாரில் வசிக்கும் ஸ்மிருதி செம்வேலை கடந்த 8-ம் தேதி பிரியா சர்மா என்ற பெண் செல்போனில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் பிரிவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அப்போது, ஸ்மிருதியின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆட் கடத்தல், போதை கடத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக பிரியா சர்மா கூறியுள்ளார். அதை கேட்டு ஸ்மிருதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்னர், தொடர்ந்து மிரட்டிய படியே 5 மணி...
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுடன், நேரு-காந்தி குடும்பத்துக்கு ஆழமான உறவு உள்ளதாக பாஜக கூறியுள்ளது. ஓசிசிஆர்பி என்ற புலனாய்வு பத்திரிக்கையாளர் அமைப்புக்கு அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளித்து வருகிறார். இந்த அமைப்பும், ராகுல் காந்தியும் இணைந்து இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானியின் புகழை கெடுக்கும் வகையிலான செய்திகளை பரப்புவதாக பாஜக குற்றம் சாட்டியது. மேலும் ஆசிய பசிபிக் ஜனநாய...
ராஜஸ்தானில் 150 அடி ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் 55 மணி போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான். ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து மாலை 4 மணியவில் அங்கு மீட்புப் பணிகள் தொடங்கின. சிறுவன் 150 அடி...