தாய்வீடு வந்தும் பதிப்பிக்கப்படாத தமிழ் கல்வெட்டுகள் – சென்னையிலிருந்து மீண்டும் மைசூருவுக்கு மாற்ற முயற்சியா?
admin - 0
மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டுக்களின் மைப்படிகள் தாய்வீடான தமிழகம் வந்த பிறகும் பதிப்பிக்கப்படவில்லை. இதனால் இவற்றை மீண்டும் மைசூருவுக்கு மாற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு கழகத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டுகள் தலைமைப் பிரிவு, மைசூரில் செயல்படுகிறது. இங்கு சேகரித்து வைக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் வீணாகி வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில்...
செல்போன் செயலி மூலம் பெற்ற ரூ.2,000 கடனை திருப்பிச் செலுத்தாததால், மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து நண்பர்க்ள், உறவினர்களுக்கு ஏஜெண்ட் அனுப்பி வைத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
செல்போன் செயலிகள் மூலம் அவசரத்துக்கு கடன் வாங்குவோர், ஏஜெண்ட்கள் மூலம் அவமானப்படுத்தப்பட்டு, இறுதியில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தும் கடன் செயலிகளையும், அதன் அட்டூழியங்களையும் முற்றிலுமாக ஒடுக்க...
பாரதியார் படைப்புகளை வெளியிட்டார் பிரதமர் மோடி: தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம் என்று புகழாரம்
admin - 0
தமிழ் மொழியின் பொக்கிஷமாக பாரதியார் நூல்கள் அமைந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 பாகங்களை பிரதமர் வெளியிட்டார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசியக் கவி பாரதியாரின் முழுமையான படைப்பு நூல்களின் தொகுப்பை 23 பாகங்களாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
மத்திய கலாச்சாரத்...
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 11) நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
கடந்த 2014-ல் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் மோடி தமிழின் பெருமைகளை பேசி வருகிறார். இவரது பேச்சுக்கள் மூலம் உலகின் பழமையான மொழி தமிழ் என மத்திய அரசின் சார்பிலும் முதன்முறையாக ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளுவர் மற்றும்...
ஆயுஷ்மான் சுகாதார அட்டைக்காக கடந்த 2 மாதங்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட 70 வயதுடைய முதியோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
70 அல்லது அதற்கு மேற்பட்ட முதியோருக்காக ஆயுஷ்மான் வாய் வந்தனா என்ற பெயரில் ஆயுஷ்மான் சுகாதார அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி 22 ஆயிரத்துக்கும் அதிகமான 70 வயதுக்கு மேற்பட்ட...
மும்பை கிழக்கு போரிவெலி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நவம்பர் 8-ம் தேதி வாட்ஸ்-அப் அழைப்பு வந்துள்ளது. அதில் போலீஸ் உடையில் இருந்த ஒருவர், தன்னை மும்பை காவல் துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் ஆதார் என்ணை கேட்டுப் பெற்றுள்ளார். பிறகு ரூ.2 கோடி முறைகேடு வழக்கில் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணின் வங்கிக்...
இந்துத்துவா குறித்த சர்ச்சை கருத்து: மெகபூபா மகள் இல்திஜா முப்திக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
admin - 0
'இந்துத்துவா ஒரு நோய்' என்று குறிப்பிட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்திக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இல்திஜா முப்தி கடந்த சனிக்கிழமை, 'ஜெய் ஸ்ரீராம்' என கூறுமாறு 3 முஸ்லிம் சிறுவர்கள் தாக்கப்படும் ஒரு வீடியோவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.
அப்பதிவில் அவர், “இந்துத்துவா என்பது கோடிக்கணக்கான இந்தியர்களை பாதித்து, கடவுளின் பெயரைக் கெடுக்கும் ஒரு நோய்" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அரசியல்...
கல்வியறிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்திரி கூறியதாவது: கிராமங்களில் கல்வியறிவு பெற்றவர்கள் கடந்த 2011-ம் ஆண்டில் 67.77 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் ஆண்டில் 77.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம் இதே காலத்தில் 57.93 சதவீதத்திலிருந்து 70.4 %-ஆக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்ற ஆண்களின் சதவீதமும் 77.15 சதவீதத்திலிருந்து 84.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கிராமங்களில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க...
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்தபோது எந்த தவறும் கண்டறியப்படவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி பெரும்...
ஆஸ்திரேலிய வாழ் இந்தியரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.6.5 கோடியை வங்கி அதிகாரிகளே சுருட்டிய விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பேகம்பேட்டையிலுள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் பரிதோஷ் உபாத்யாய் என்ற ஆஸ்திரிலிய வாழ் இந்தியர் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இவர் தனது ஹைதராபாத் வங்கிக் கணக்கில் ரூ.6.5 கோடி வைத்திருந்தார். இதனை அவர் பல ஆண்டுகளாக...









