மகாராஷ்டிர அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நாக்பூரில் நடைபெற்ற விழாவில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி...
பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அவரது மனைவி, மாமியார், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டம் பெனி பகுதியை சேர்ந்தவர் அதுல் சுபாஷ் மோடி (35). இவருக்கும் உத்தர பிரதேசத்தின் ஜவுன்பூர் பகுதியை சேர்ந்த நிகிதா சிங்கானியாவுக்கும் (30) கடந்த 2019 ஜூனில் திருமணம் நடந்தது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பொறியாளராக அதுல்...
பொதுத் துறை வங்கிகள் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: நிர்மலா சீதாராமன் விளக்கம்
admin - 0
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பொதுத் துறை வங்கிகள் குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்" பொதுத் துறை வங்கிகள் தனியார் நிதியாளர்களைப் போல பணக்காரர்களுக்கும், பலம்வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகின்றன. பொதுத் துறை வங்கிகளுக்கு மக்களை நலனை விட லாபம்...
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விழா, மகா கும்பமேளாவாக நடத்தப்படுகிறது.
ஜனவரி 13-ல் தொடங்கும் மகா கும்பமேளாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பு கடந்த2019 கும்பமேளா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
தற்போது உ.பி. அரசு நடத்தும் மகா கும்பமேளா ஏற்பாடுகளை முதல் முறையாக பிரதமரே தொடங்கி...
மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்குகளை பதிவு செய்யக்கூடாது, விசாரணை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1991-ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை ரத்து...
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 57 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாலை வயலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலின் பேரில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு...
நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2031-ம் ஆண்டுக்குள் மும்மடங்கு அதிகரிக்கும் என அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அணு மின்சக்தி உற்பத்தி தொடர்பாக மக்களவையில் அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 2014-ம் ஆண்டு 4,780 மெகா வாட்டாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 8,081 மெகா...
சாலை விபத்தில் ஆண்டுக்கு 1.78 லட்சம் பேர் உயிரிழப்பு: 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்
admin - 0
சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சாலை விபத்து குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி 1.78 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்...
நாட்டில் செல்வ வளத்தை உருவாக்கும் தொழில்முனைவோர்களை அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்க வைக்க கூடாது என பிரபல ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் " உலக ஜனநாயகத்தின் கலங்களை விளக்கமாக நாம் இருக்க விரும்பும்போது, இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குபவர்கள் அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்....
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்க கேஜ்ரிவால் வாக்குறுதி
admin - 0
டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின் 2020-ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி வியூகம் வகுத்துள்ளது.
இதற்கிடையில்,...









