இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல சம்பந்தப்பட்ட நாட்டின் விசா பெற வேண்டும். இந்நிலையில், பிரதமர் மோடி அரசு சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தற்போது 62 நாடுகளுக்கு விசா பெறாமல் இந்தியர்கள் சுற்றுலா சென்று வர முடியும். அந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைய உள்ளது. விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....
தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு வரலாற்றாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மும்பையில் கடந்த சனிக்கிழமை உலக இந்துக்கள் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினைஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப்படுத்தினார். ஆனால் ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதுபோல், மிகவும் உயரிய வகை துணிகளை நெய்ந்தவர்களின்...
யாசகர்களுக்கு தானம் அளிப்போர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் விளங்குகிறது. தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த பெருமையை இந்தூர் பெற்றிருக்கிறது. அடுத்த கட்டமாக யாசகர்கள் இல்லாத நகரம் என்ற இலக்கை எட்ட இந்தூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆகிஷ் சிங் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 2025-ம் ஆண்டு...
தேசிய மருத்துவப் பதிவேடு வலைதளம் தொடங்கப்பட்டு மூன்றரை மாதங்கள் ஆன நிலையில் தற்போது 6,500-க்கும் குறைவான மருத்துவர்களே அதில் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் மருத்துவப் பணியாற்ற தகுதியான அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தேசிய மருத்துவப் பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். என்எம்ஆரின் தனித்தன்மை என்னவெனில் அது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப்படும். இது...
ராஜஸ்தானில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு 6 பேருக்கு பொருத்தம்
admin - 0
ராஜஸ்தானில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு 6 பேருக்கு பொருத்தப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டம் மன்புரா பிபாஜி நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். 33 வயதான இவர் கடந்த 10-ம் தேதி உள்ளூரில் ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மூளை செயலிழந்துவிட்டதாக 12-ம் தேதி மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஜலவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோர் மற்றும் மூத்த...
அரசியல் கட்சியினரை காட்டிலும் இடதுசாரி சிந்தனையுள்ள அரசு ஊழியர்கள் அதிகம்: ஜி20 தூதர் அமிதாப் காந்த் கருத்து
admin - 0
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அரசு ஊழியர்கள், பொருளாதார வல்லுநர்கள் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களாக உள்ளனர் என்று ஜி20 அமைப்பின் இந்தியாவுக்கான தூதர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
16-வது நிதி ஆணையத்தின் தலைவரான அரவிந்த் பனகாரியா எழுதிய "தி நேரு டெவலப்மெண்ட் மாடல்" புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமிதாப் காந்த் கூறியது: சுதந்திரமான சந்தைகளை நம்பும் பொருளாதார நிபுணர் என்ற காரணத்துக்காக பனகாரியா மீது எனக்கு...
ஒடிசாவில் காட்டு யானை தாக்கியதில் சகோதரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கன்டாபள்ளி கிராமத்தில் ஒரு குடும்பம் குடிசை வீட்டில் வசித்து வந்தது. இந்த கிராமம் போனாய் வனப்பகுதிக்கு அருகே உள்ளது. அங்கு காட்டு யானை ஒன்று நேற்று வந்து குடிசை வீட்டை சேதப்படுத்தியது. யானையை பார்த்ததும் வீட்டில் இருந்த பெரியவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால், அந்த வீட்டில் சமியா முண்டா (12), சாந்தினி முண்டா...
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும்...
உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஜம்மு-காஷ்மீர் வழித்தடத்தில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் மெந்தர் செக்டாரிலிருந்து பூஞ்ச் மற்றும் ஜம்மு பகுதிகளை இணைக்க மானிய கட்டணத்தில் ஹெலிகாப்ட்டர் சேவையினை வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், விமான இயக்குநர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறி்த்த ஆய்வை...
நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன்பிறகு நடைபெற்ற கூட்டங்களில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்புக்கு...









