மகாராஷ்டிராவில் தேர்தல் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் தீ விபத்து: பலர் காயம்

0
20

மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் வென்ற சுயேட்சை வேட்பாளரின், வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.

மகாராஷ்டிரா சந்த்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சிவாஜி பாட்டீல். இவர் போட்டியிட பாஜக சீட் வழங்கவில்லை. இதனால் இவர் இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானபோது சிவாஜி பாட்டீல் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஸ் பாட்டீலைவிட 24,134 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பெண் சிவாஜி பாட்டீலுக்கு ஆரத்தி எடுத்தார். அப்போது கிரேன் ஒன்றில் இருந்து வண்ண பொடிகள் ஆதரவாளர்கள் மீது தூவப்பட்டன. இதில் வண்ண பொடிகள் ஆரத்தி தட்டின் மீது விழுந்ததில் தீ சிதறி பரவியது. இதில் சிவாஜி பாட்டீல் உட்பட பல பெண்கள் தீக்காயம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here