Google search engine
‘சலார் 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்துள்ளார். ’சலார்’ படத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி அப்படம் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது ‘எம்புரான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பிருத்விராஜிடம் ‘சலார் 2’ எப்போது என்ற கேள்விக்கு கேட்கப்பட்டது. அதற்கு பிருத்விராஜ், “பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் மும்முரமாக இருக்கிறார். நானும் அடுத்டுத்த படங்களில் மும்முரமாக இருக்கிறேன். பிரபாஸும் ‘ஸ்பிரிட்’...
நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இதையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது, கார்த்தியின் 29-வது படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, சிம்புவின் ‘மாநாடு’ படங்களில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து...
மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். இதில் டோவினோ தாமஸ், விவேக் ஓபராய், ஜான் விஜய் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘எல் 2: எம்புரான்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 27-ம்தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி...
சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்திப் படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். காஜல் அகர்வால், சர்மான் ஜோஷி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது: கடந்த 47 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். சுமார் 258 படங்களில்...
நடிகை சோனா, தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடரை இயக்கியுள்ளார். ஓடிடி தளம் ஒன்றில் வெளியாக உள்ள இந்த வெப் தொடருக்கு எதிராக பலர் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாகவும் பல அவமானங்களைச் சந்தித்ததாகவும் சோனா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது வெப் தொடரின் ஹார்ட் டிஸ்க்கை சங்கர் என்ற மேலாளர் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறி தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளன (பெப்சி)...
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் பயோபிக்கான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘கேதார்நாத்’, ‘சிச்சோரே’ என சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணம் இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த தற்கொலைக்குப்...
ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை அடுத்து இயக்குநர் அட்லி, சல்மான் கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாகவும் இதற்காக ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் பட்ஜெட் காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியானது. இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்தியா படத்தை அட்லி இயக்குகிறார். இதை சன் பிக்சர்ஸ்...
ஹாலிவுட் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச், ‘47 ரோனின்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்டவர். அவர் அடுத்து ‘ஒயிட் ஹார்ஸ்’ என்ற அறிவியல் புனைகதை வெப் சீரிஸை இயக்க இருந்தார். இதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவருடன் கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. 44 மில்லியன் டாலர் பட்ஜெட் என்று கணிக்கப்பட்டு, அவருக்கு 11 மில்லியன் டாலரை முதலில் கொடுத்திருந்தது. பின்னர் அந்த தொகை குறைவாக இருப்பதாகக் கூறியதை அடுத்து...
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூன் 5- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் கமல்ஹாசன்...
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் இருந்து, மாறி தற்போது எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். பனம்பிள்ளி நகரில் உள்ள மம்மூட்டியின் வித்தியாசமான பங்களாவின் முன் நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் அந்த பங்களா, ரசிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது. விகேஷன்...