ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள், ஃபாலோயர்ஸ்களுக்கு நானும் மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு. நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். இருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு...
நடிகர் கிருஷ்ணா தயாரித்து, நடித்துள்ள வெப் தொடர், ‘பாராசூட்'. ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்த தொடரில், கிஷோர், கனி, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பாவா செல்லதுரை உட்பட பலர் நடித்துள்ளனர்.
இரண்டு இளம் சிறார்களின் உலகைப் பற்றியதாக உருவாகியுள்ளது இந்த வெப் தொடர். குழந்தைகளின் மீது அன்பு வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டு மென கண்டிப்பு காட்டுகிறார்கள். இருவரும் பெற்றோருக்குத்...
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் க்ரைம் திரில்லர் படம் ‘லாரா’. மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
எம்.கே. ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். அசோக்குமார், அனு ஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி, தயாரிப்பாளர் கார்த்திகேசன் என பலர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.ரவீன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ரகு ஸ்ரவன் குமார் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் சங்கத்...
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை, தனது குடும்பத்தினருடன் அருண் விஜய் சமீபத்தில் பார்த்தார். கிளைமாக்ஸ் முடிந்ததும் அவருடைய குடும்பத்தினர்...
ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு – 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
admin - 0
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும்...
உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்க அர்த்தத்தை தேடுகிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “மிகப்பெரிய 30-ம் ஆண்டுக்குள் நுழைவதை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எல்லா விஷயங்களும் ஒரு எதிர்பாராத முடிவை சுமந்திருக்கின்றன. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும்...
தமிழ்த் திரையுலகம் அதிகம் கொண்டாட மறந்த மகத்தான இசை அமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. இந்த ஆதங்கத்தை அண்மையில் வந்த ‘லப்பர் பந்து’ படத்தில் வரும் ஒற்றைக் காட்சி மிகச் சுலபமாக விளக்கியிருக்கும். அந்தக் காட்சியில் ‘ராசிதான் கைராசிதான்’ பாடல் வரும். அதைக் கேட்ட ஒருவர் அந்தப் பாடலை வேறொரு இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லி ரசிக்க, இன்னொருவர் “அது அவர் அல்ல, தேவா” என்பார்.
இப்படித்தான் தேவாவின் பல பாடல்களை...
ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘சொர்க்க வாசல்’. இதில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃபுதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ், பல்லவி சிங் தயாரித்துள்ள இந்த படம் வரும் 29-ல் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர்...
உதய் கார்த்திக், சுபிக்ஷா ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ‘ஃபேமிலி படம்’. விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், ஜா, சந்தோஷ், மோகனசுந்தரம், ஆர்ஜே பிரியங்கா, ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்துள்ள இந்தப் படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கியுள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு அனிவீ இசையமைத்துள்ளார். அஜிஷ் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி செல்வகுமார் திருமாறன் கூறும்போது, "ஒரு குடும்பத்தில்...
‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப் படத்தின் ‘டிரெய்ல’ரில் அனுமதியின்றி சேர்த்தமைக்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தயாரிப்பாளர் தனுஷ் தரப்பு.
இதனையொட்டி தனுஷூக்கு எதிராக நயன்தாரா நீண்ட புகார் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட, சமூக வலைதளங்களில் அது பேசுபொருளானது. நயன்தாரா-விக்னேஷ்சிவன் இணை இப்படத்தின் காட்சிகளை, இசையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அனுமதி கொடுக்காமல்...










