நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் மோசடி: ஹாலிவுட் இயக்குநர் கைது

0
50

ஹாலிவுட் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச், ‘47 ரோனின்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்டவர். அவர் அடுத்து ‘ஒயிட் ஹார்ஸ்’ என்ற அறிவியல் புனைகதை வெப் சீரிஸை இயக்க இருந்தார்.

இதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவருடன் கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. 44 மில்லியன் டாலர் பட்ஜெட் என்று கணிக்கப்பட்டு, அவருக்கு 11 மில்லியன் டாலரை முதலில் கொடுத்திருந்தது. பின்னர் அந்த தொகை குறைவாக இருப்பதாகக் கூறியதை அடுத்து இன்னொரு 11 மில்லியன் டாலரை வழங்கியது. அதைக் கொண்டு ஒரு எபிசோட் கூட எடுக்காமல், சொகுசான கார்கள், கிரிப்டோகரன்ஸி முதலீடு, ஆடம்பரமான வீடுகளை, கார்ல் எரிக் ரின்ச் வாங்கியுள்ளார்.

இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here