Google search engine
தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஸ்ரீ...
‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். நிஜ வாரணாசியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.50...
சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்திகேயன் மணி இயக்கிய இந்தப் படம் கடந்த 6-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் காளி வெங்கட் பேசும்போது, ‘‘இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் என் தந்தையை நினைவுபடுத்தியது. அவருக்குச் சமர்ப்பிக்க, இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது...
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள மலையாளப் படம், 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா'. ஜூன் 27-ல் வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபமா, மலையாள சினிமாவில் தன்னை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். 'பிரேமம்' படம் மூலம் அறிமுகமான அனுபமா, தமிழ், தெலுங்கில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் அதிகம் நடிக்கவில்லை. இதனால், மலையாள படங்களில் அதிகம் நடிக்காதது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, “மலையாள சினிமாவில் என்னை...
‘தடயம்’ படத்துக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘காயல்’. காயத்ரி சங்கர், லிங்கேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜே ஸ்டூடியோஸ் சார்பில் ஜேசு சுந்தர்மாறன் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கிற இந்தப் படம் பற்றி தமயந்தியிடம் பேசினோம். ‘காயல்’ எதை பேசுற படம்? காதலுக்கு எதிரா சாதி மாதிரியான கொடுமைகள் இன்னும் இருக்குங்கறதை சொல்ற படம் இது. தற்கொலையை எதிர்த்து இயக்கம் நடத்திட்டு இருக்கிற ஒரு பொண்ணு,...
விஜய் பிறந்த நாளன்று ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத்...
அதர்வா நடித்திருக்கும் ‘டிஎன்ஏ’, வரும் 20-ம் தேதி வெளியாகிறது. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பற்றி அதர்வாவிடம் பேசினோம். ‘டிஎன்ஏ’ என்ன மாதிரியான கதையை பேசுது? இது ஃபேமிலி ஆடியன்ஸை குறி வச்சு எடுத்திருக்கிற படம். சமூகத்துல புறக்கணிக்கப்படற இரண்டு பேர், ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கிறாங்க. அவங்க...
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஜூன் 20 -ல் வெளியாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, அமேசான் பிரைம் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தாமதமானால்...
ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘ப்ரோகோட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக உருவாகும்...
இந்திப் பட இயக்குநரான விவேக் அக்னிகோத்ரி, ‘த தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ என்ற படத்தை 2019-ம் ஆண்டு இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கி, 2022-ம் ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வரவேற்பைப் பெற்றது. நாடு முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் ‘த வேக்ஸின் வார்’ என்ற படத்தைக் கடந்த ஆண்டு இயக்கினார். இது அதிகம் பேசப்படவில்லை. இப்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்: த பெங்கால் சாப்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்...