கன்னியாகுமரி: லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக சால்வன் துரை பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சி. சால்வன் துரை இன்று பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வாளராக சென்ற இவர் தற்போது...

நாகர்கோவில்: கடையை பூட்டியதால் மாற்றுதிறனாளி குடும்பத்துடன் தர்ணா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் அருகே பிள்ளையார்கோவில் தெருவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளி இராமசாமியின் கடையை அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஆக்கிரமித்து கடையில் உள்ள பொருட்களை தெருவில் வீசி...

குளச்சல்: துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு; மீனவர்கள் கவலை

குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் உயர்ரக மீன்களான...

வில்லுக்குறி: தாய்மாமாவை அடித்து கொன்ற மருமகன் கைது

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (50). இவர் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி மீனா (49). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களுடன் கதிர்வேலின் தாயாரும் வசித்து வருகிறார்.  இந்த நிலையில் கதிர்வேலின் தங்கை மகன் அஸ்வின் (23) என்பவர் அடிக்கடி மது போதையில் கதிர்வேலின்...

மாத்தூர்:   மீண்டும் காமராஜர் கல்வெட்டு பணி துவக்கம்

திருவட்டார் அருகே மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவாயில் பகுதியில் காமராஜர் படம் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது பேசிய திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, ஒரிரு நாட்களில்...

கன்னியாகுமரி: காளிமலையில் குவிந்த பக்தர்கள்

குமரின் காளிமலை கோவில் கடல் மட்டத்தில் இருந்து மலை மேல் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தை மாத ஐப்பசியுடன் கூடிய பௌர்ணமியை தொடர்ந்து குடும்ப அர்ச்சனை, ஐஸ்வர்ய பூஜை, ஐப்பசி பூஜை, அலங்கார ஆராதனையோடு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகம்...

மார்த்தாண்டம்: மினிபஸ்கள் இயக்க விண்ணப்ம்; கலெக்டர் தகவல்

குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - தமிழக அரசாணைப்படி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து உட்பட்ட 10 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினி பஸ்களான எஸ்பிசி விண்ணப்ப படிவத்தினை பரிவாகன் மூலம்...

கொல்லங்கோடு: ஆபத்தாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ

குமரியில் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்வது வழக்கம். இதற்குப் பல்வேறு விதிமுறைகளை போலீசார் வைத்துள்ளனர். போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி இவற்றைக் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் விதி மீறல்கள் பல பகுதிகளில் நடந்து விபத்துக்களும் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. அரசின் உத்தரவுகளை ஆட்டோ...

நித்திரவிளை: பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

நித்திரவிளை அருகே நம்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது மனைவி அம்பிகா. தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அம்பிகா உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பால்ராஜ் கடந்த 10-ம் தேதி மாலை மனைவியைக் கவனிக்க...

மண்டைக்காடு: வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்மண்டைக்காடு: வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (பிப்.10) இரவு சதீஷ் மண்டைக்காடு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடன் சேர்ந்து ஏவிஎம் கால்வாய் சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்த...